ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் (25.05.2024) இன்று நடந்து வருகிறது. அதன்படி டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வாக்குச்சாவடியில் முதலில் வாக்களித்த ஆண் வாக்காளர் நான் என்பது மகிழ்ச்சி. நாட்டிற்கு இது முக்கியமான தருணம் என்பதால், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.