உலக மக்கள் மத்தியில் சனாதனம் பரவும் என சிக்கிம், கோவா மாநிலம் உருவான தினவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நமது விருந்தோம்பல் குணத்தால் நமது டி.என்.ஏ.வில் சனாதன தர்மம் உள்ளது; இந்திய மக்களிடம் அது முழுவதும் நிறைந்துள்ளது. அரசால் எதையும் தனியாக செய்ய முடியாது மக்கள் நினைத்தால் மட்டுமே, எந்த ஒரு திட்டமும் வெற்றி பெறும்.
அதேபோல நாம் அனைவரும் ஒன்று என்பதை வலியுறுத்தும் சனாதனமும் ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இவ்வாறு ஆளுநர் கூறியுள்ளார்.