வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், டாக்காவில் உள்ள பிரபல ஹிந்து பாடகரான ராகுல் ஆனந்தாவின் வீட்டிற்கு ஜிகாதிக்கூட்டம் தீ வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்கா நகரின் தன்மோண்டி பகுதியில் பிரபல ஹிந்து நாட்டுப்புற பாடகர் ராகுல் ஆனந்தாவின் வீடு உள்ளது. இவர் ‘ஜோலர் கான்’ என்ற நாட்டுப்புற இசைக்குழுவை நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு வங்கதேசம் வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நட்புரீதியாக இவரது வீட்டுக்கு வருகை தந்தது மிகுந்த கவனம் பெற்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ராகுல் ஆனந்தாவின் வீட்டை முற்றுகையிட்ட ஜிகாதி கும்பல் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றது. வீட்டை சூறையாடிய அக்கும்பல் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்தது. பிறகு அங்கிருந்த 3000க்கும் மேற்பட்ட பழமையான இசைக்கருவிகளுடன் வீட்டுக்கு தீவைத்தது.
இதற்கிடையில் தாக்குதலில் இருந்த தப்பிக்க ராகுல் ஆனந்தா, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினர் வீட்டை விட்டு எப்படியோ வெளியேறினர். பிறகு அவர்கள் பத்திரமான இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
‘ஜோலர் கான்’ இசைக்குழு தனது பதிவில் “தன்மோண்டியில் உள்ள வீடு, ஒரு காலத்தில் ராகுல் ஆனந்தா மற்றும் ‘ஜோலர்கான்’ குழுவின் சரணாலயமாக இருந்தது. இது ஒரு குடியிருப்பு மட்டுமல்ல, எண்ணற்ற பாடல்கள்மற்றும் கருவிகள் வடிவமைக்கப்பட்ட ஒரு படைப்பு மையமாக இருந்தது. அனைவரையும் வரவேற்ற இந்த வீட்டில் ராகுல் வங்கதேசத்தின் தனித்துவமான இசையை வடிவமைத்தார்’’ என்று கூறியுள்ளது.
தொடர்ந்து வங்கத்தில் உள்ள ஹிந்துக்கள் உயிர் பயத்துடன் வாழும் நிலை உருவாகியுள்ளது. ஹிந்துக்களை தேடிப்பிடித்து ஜிகாதிகள் கூட்டம் தாக்குதல் நடத்தி வருகிறது. பல உலக நாடுகள் வங்கத்தில் உள்ள ஜிகாதிகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.