‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 21) டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டார்.
குவாட் அமைப்பு கடந்த ஆண்டு மேற்கொண்ட பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
செப்டம்பர் 23ம் தேதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.