கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தூதரக முகாமிற்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிராம்ப்டன் பகுதியில் (நவம்பர் 03) போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஹிந்து கோயில் முன்பு முழக்கங்களை எழுப்பினர். இதில் கோயிலுக்கு வந்திருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீதும் கண்மூடித்தனமாக பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். ஹிந்து மக்கள், கோயிலில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “கனடாவில் உள்ள ஹிந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது அயலக மக்களை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் அதிர்ச்சிகரமானது.

இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. இந்த விவகாரத்தில் கனடா அரசு நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்” என்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் நடத்தப்படும் வன்முறைச் செயல்கள்” என குறிப்பிட்டிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top