சுவாமி ஐயப்பா; இசைவாணிக்கு அறிவு புகட்டி அனுப்பப்பா: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம்

‘ஐயம் சாரி ஐயப்பா, அறிவு புகட்டி அனுப்பப்பா’ என்று பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கிறிஸ்துவ பாடகி இசைவாணியை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்து கடவுள் சபரிமலை ஐயப்பன் குறித்து இழிவுப்படுத்தும் வகையில் கிறிஸ்துவ பாடகி இசைவாணி பாடல் ஒன்றை பாடியிருந்தார். இவரது செயலுக்கு பாஜக உட்பட இந்து அமைப்புகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கிறிஸ்துவ பாடகி இசைவாணி மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திராவிட மாடல் அரசு இதுவரையில் கைது செய்யாமல் பாதுகாத்து வருகிறது.

இந்த நிலையில், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சபரிமலை ஐயப்பன் பாடல் விவகாரத்தில் தன் கருத்தை மேலாளர் வாயிலாக பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறுகையில், ‘‘நான் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். சமீபத்தில் இசைவாணி பாடியிருந்த ‘ஐயம் சாரி ஐயப்பா’ பாடல் கேட்டேன்! சுவாமி ஐயப்பனிடம் மன்னிப்பு கேட்டு பாடத் தொடங்கிய விதம் அருமை, நல்ல குரல் வளம். ஆடிக்கொண்டே பாடிய ஸ்டைல் அற்புதம்! ஒரே ஒரு குறை! பாடல் தெளிவாக கேட்காத அளவுக்கு வாத்தியங்களின் ஓசை அதிகம்.

இதைப்போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு விஷு, மகரஜோதி போன்ற விசேஷ நேரங்களில் பாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும்! இவர்களுக்கும் ‘பூசை’ சிறப்பாக நடக்கும்! நான் சிறுவனாக இருந்த போது எனது மூத்த சகோதரர் சபரிமலைக்கு இருமுடி கட்டி, வாய்க்கரிசி வாங்கி செல்வதை கண்டிருக்கிறேன்.

அதே போல் இவர்களும் உறவினர்கள் நண்பர்களிடம் வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு சென்று இசை நிகழ்ச்சி நடத்தலாம்! பாடல் எழுதியவரையும் அறிமுகப்படுத்தலாம். இப்படிப்பட்ட அருமையான பாடலை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பாடலாம்.

எல்லா மொழி பக்தர்களும் கேட்டு ‘பரிசளிப்பார்கள்’ அல்லவா? யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பாடலாம். என்ன ஒன்று. ஐயன் ஐயப்பன் இதை ‘நிந்தா ஸ்துதி’யாக ஏற்றுக்கொள்வார்! அவர் வாகனமாகிய புலி ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை! ‘ஐயம் சாரி ஐயப்பா. அறிவு புகட்டி அனுப்பப்பா,’’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top