கேரளாவில், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் வன்முறையில் ஈடுபட்டது குறித்த வழக்குகளில், தடை செய்யப்பட்ட, ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. நேற்று அதிரடிச் சோதனை நடத்தியது.
பி.எப்.ஐ. எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன.
இவை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவது, பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைககளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.
இதன் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்த அமைப்புக்கு கடந்த செப்டம்பரில், சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடை விதித்தது.இதையடுத்து, இந்த அமைப்புக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், கேரளாவில் பல மாவட்டங்களில் இந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் வன்முறையில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து எர்ணாகுளம், கன்னுார், மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, திருச்சூர், கோட்டயம் உட்பட 12 மாவட்டங்களில், பி.எப்.ஐ., அமைப்பின் உறுப்பினர்களுக்கு சொந்தமான 56 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.
கேரளாவில் 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
இதில் கத்தி, வாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள், வன்முறையை தூண்டும் பிரசுரங்கள், டிஜிட்டல் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து இவர்கள் இளைஞர் களுக்கு பயிற்சி அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து என்.ஐ.ஏ. கூறியதாவது:
இந்த சோதனை வாயிலாக, பி.எப்.ஐ., அமைப்பினர் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததும், அவர்களிடம் வன்முறையை தூண்டும் விட்டு பயங்கரவாத அமைப்பில் சேரும்படி ஊக்கப்படுத்தியதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் என்.ஐ.ஏ., நடத்திய மிகப் பெரிய சோதனைகளில் இது குறிப்பிடத்தக்கது ஆகும் என்றார் அவர்.
கேரளா கம்யூனிஸ்ட் அரசு தனது அரசியல் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள, பி. எப். ஐ போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு இத்தனை ஆண்டுகாலம் பால் ஊற்றி வளர்த்துள்ளது. இன்று, பி. எப். ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. என். ஐ. ஏ முழு வீச்சில் களமிறங்கி தீவிரவாதத்தில் ஈடுபடுவோரை முழுவதுமாக பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்பதே தேசபக்தர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.