பாகிஸ்தானில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண், தலை துண்டித்து, தோல் உரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர்.
அதனாலேயே வஞ்சிக்கவும் படுகின்றனர். இங்கு சிந்து மாகாணத்தில் உள்ள சின்ஜ்ஹோரா நகரின் அருகேயுள்ள கிராமத்து வயல் வெளியில்,
சமீபத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பெண்ணின் தலை, துண்டிக்கப்பட்ட நிலையில் சற்று தொலைவில் கிடந்தது. மேலும், அந்த பெண்ணின் உடல் மற்றும் முகத்தில் உள்ள தோல் முழுமையாக உரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்; மார்பகங்களும் சிதைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பாகிஸ்தான் எம்.பி.,யும், ஹிந்து மதத்தைச் சேர்ந்தவருமான கிருஷ்ண குமாரி கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் தயா பெல். ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர். கணவரை இழந்த இவருக்கு, நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்த பெண் எதற்காக இத்தனை கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. விசாரணை நடக்கிறது என அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஹிந்து மற்றும் சீக்கிய மதத்தவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதும், அங்குள்ள இந்து ஆலயங்கள் சூறையாடப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.