தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கின்ற திட்டத்தை கொண்டு வந்தது பாஜக அரசு தான். இதற்கு முன்னால் ஆண்ட கட்சிகள் இப்போது இருக்கின்ற அதே கட்சிகள் கடந்த காலத்தில் தங்களது கட்சி நிதி சம்பந்தமாக ஒரு இன்ச் அளவுக்கு கூட வெளிப்படை தன்மை இல்லாமல் இருந்ததை மறுக்க முடியுமா?
அந்தந்த கட்சிகள் தங்களது கட்சியின் நிதி நிலையை அறிவித்தது உண்டா? ஆர்டிஐ மூலம் தகவல் பெறுவோருக்கு இந்த தகவல்கள் வெளியே இதுவரை தெரிந்தது உண்டா? இதையெல்லாம் கேட்டால் பதில் இல்லை என்பதால் பாஜக மீது நேர்மையற்ற குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.
தேர்தல் பத்திரங்கள் ஒவ்வொரு காலாண்டின் முதல் பத்து நாட்கள் என ஆண்டுக்கு நான்கு முறை வெளியிடப்படுகிறது.அதனுடைய செல்லுபடி தக்க நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் கட்சிகள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.இது தவிர தேர்தல் காலங்களில் 10 நாட்கள் வெளியிடப்படுகிறது
யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் இதன் மூலம் நிதி தரலாம்.நிதி தருபவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.ஆனால் கட்சி நிதியை வெளிப்படையாக தருவதற்கு விருப்பமில்லாதவர்கள் அல்லது அச்சப்படுபவர்கள் இப்படி நிதி கொடுக்கிறார்கள்.
அவர்களது சுதந்திரத்தை பாதுகாப்பது தவறா?சுதந்திரம் பற்றி பேசுபவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? நிதி அளிப்பவர்கள் தங்களது ஆண்டு வரவு செலவு கணக்கில் இதை காண்பித்து இருப்பார்கள். இது அதிகார பூர்வ ஊழல் இல்லாத வெள்ளை வரவு செலவு முறையாகும்.
இதிலே என்ன குற்றச்சாட்டு உங்களால் சுமத்த முடியும்? பாஜகவுக்கு நிதி அளித்த மாதிரி மற்ற கட்சிகளுக்கும் அளிக்கப்பட்ட நிதியிலே சம்பந்தப்பட்டவர்கள் ரகசியம் காக்க வேண்டும் என்பதால் தானே அளித்திருக்கிறார்கள் மற்ற கட்சிகளுக்கு பாஜகவை விட குறைவாக நிதி பெற்றதால் மட்டுமே இப்படி பொய் குற்றம் சாட்டப்படுகிறது என்று சொன்னால் அது சரிதானே
இதுவரை தங்கள் கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளில் இவர்கள் எங்கே வெளிப்படை தன்மையை மற்ற கட்சிகள் காட்டியுள்ளனர்.தங்களுக்கு வருகின்ற நிதியில் கட்சியின் குடும்பங்கள் அபகரித்தது போக மீதி மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது.அதுவும் அந்தக் கட்சிக்குள் ஒரு சிலருக்கு மட்டுமே வந்த நிதி விபரம் தெரியும் என்ற நிலை இருந்ததை மறுக்க முடியுமா?
இன்றும் அந்த கட்சிகளின் நிதி சேகரிப்பு அதே மாதிரிதான் இருக்கிறது என்பது உண்மைதானே’.நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல்முறையாக கட்சிகளுக்கான நிதியளிப்பை வெளிப்படை தன்மையோடு கொண்டு வந்த ஒரே கட்சி/அரசு பாஜக மட்டுமே. இதில் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தாலும் எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியாததால் இப்படி வெற்று புலம்பல்களை, கையாலாகாத ஊழல் கட்சிகள் புலம்புகின்றனர்.வெளிப்படை தன்மையோடு அரசியல் கட்சிகளின் நிதி சேகரிப்பு இருக்க வேண்டும் என்கின்ற அடுத்த கட்டத்துக்கு நாட்டை எடுத்துச் செல்லுகிறது பாஜக என்பதற்கு நாம் பெருமை கொள்ள வேண்டும்.