விடியா அரசின் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களும் சரி, வாக்குறுதிகளும் சரி கொடுத்த அன்றைய நாள் மட்டுமே பரபரப்பாக பேசப்படும்
மீடியாக்களின் கேமரா திரும்பியவுடன் அவ்வளவு தான். அந்த திட்டங்களும் சரி, அந்த திட்டத்தின் பயனாளிகளும் சரி, காலம் முழுவதும் கிடப்பில் தான் கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய விடியா அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளில் உடல்நலக்குறைவுக்கு மருந்து உட்கொள்ள விருப்பப்படுகிற ஒரு கோடி பேரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், 6 மாதங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அமைச்சர் அறிவித்ததோடு சரி, களத்தில் பொதுமக்களின் நிலையோ பரிதாபம்.
பல இடங்களில் முதல் தடவை மருத்துவர்கள் வந்ததோடு சரி, அதன்பின் அந்த பக்கமே எட்டிப்பார்க்கவில்லை எனவும் தாங்கள் காசு கொடுத்து மருந்து வாங்கி சாப்பிடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 29ம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளிக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் உண்மையில் ஒரு கோடி பேருக்கு மருந்து வழங்கியதற்கு எந்தவித புள்ளிவிவர குறிப்பும் இல்லை என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரே நோயாளியின் தரவுகளை இரண்டு,மூன்று முறை பதிவு செய்து ஒரு கோடி பேருக்கு மேல் பயன்பெற்றுள்ளதாக விடியா அரசு கணக்கு காட்டுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விடியா அரசின் தோல்வி திட்டம் என ஈபிஎஸ் விமர்சித்துள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை திட்டத்தில் ஒரு வாகனத்தை மட்டும் கூடுதலாக இயக்கி மக்களை தேடி மருத்துவம் என விடியா அரசு விளம்பரம் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.