முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் மகனும், ஈரோடு கிழக்கின் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வே.ரா இன்று (04.1.23) மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவருடைய இரங்கல் செய்தியில் “ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்களின் திடீர் மறைவுச் செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளித்தது.
பாரம்பரிய மிக்க அரசியல் குடும்பத்தில் மக்கள் பணி ஆற்றிக் கொண்டிருந்த, இளம் சேவகர், மக்கள் தொண்டர் மறைவு பேரிழப்பாகும். அன்னாரின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.
அவரின் தந்தையார் திரு ஈ.வி.கே.எஸ் அவர்களுக்கும், தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கும்,
மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.