அறிவாலயத்தை மகிழ்விக்க புலம்பும் செல்வப் பெருந்தகை; எச்சரிக்கும் வி.பி துரைசாமி !

தமிழக பாஜக தலைவரின் பத்திரிகையாளர் சந்திப்பினை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மனம் குழம்பியநிலையில், திமுக வை குளிர்விக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதனை கண்டிக்கும் விதமாக பாஜகவின் மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி ஒரு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையாவது; “தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை செய்தியாளர் கூட்டத்தை புறக்கணிப்பு செய்யுங்கள் என்று பத்திரிகையாளர்களுக்கு. வினோதமான ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு கட்சியின் நிர்வாகி திரு.செல்வப் பெருந்தகை மற்றொரு அரசியல் கட்சித் தலைவரின் பத்திரிகையாளர் கூட்டத்தை புறக்கணியுங்கள் என்று கேட்டுக் கொள்வது. இந்திய திருநாட்டில் எங்கும் நடக்காத செயல் ஆகும். பத்திரிகையாளர் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்காமல், பொறுமை காக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் எதற்காக பத்திரிகையாளர்கள் கூட்டத்தை திரு.அண்ணாமலை கூட்டினார் என்றும் கேட்கிறார். அகில இந்திய கட்சியின், சட்ட மன்ற உறுப்பினராக உள்ள திரு. செல்வ பெருந்தகை, பா.ஜ.கவின் மாநில தலைவர் அவர்களைப் பார்த்து, ஏன் பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டினீர்கள் என்று கேட்பதற்கும், புறக்கணிப்பு செய்யுங்கள் என்று கேட்பதற்கும், செல்வ பெருந்தகை அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது. இது 1975-ஆம் எமர்ஜென்சி
காலத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது. யாரையோ மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பது போல உணர்கிறேன்.

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அழைத்தும் கூட பத்திரிக்கையாளர்கள் வராமல் புறக்கணிப்பதாலும், அருமை தலைவர் அண்ணாமலை அவர்கள் அலுவலகத்தில் இருந்தாலே…. 50 கேமராக்கள் காத்திருப்பதையும் கண்டு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி புலம்புகிறாரா?
இதுதான் காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகமா? அல்லது பத்திரிகையாளர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையா? எதுவாக
இருப்பினும் சம்பந்தமில்லாத விஷயத்தில், ஆளும் கட்சியின் ஆதாயம் கருதி வெளியிடப்பட்டிருக்கும்……
அரைவேக்காட்டு அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்” என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top