இந்திய அஞ்சல் துறையும், ரயில்வே துறையும் இணைந்து பார்சல் விநியோக திட்டத்தை துவங்கியுள்ளன.
அதன்படி, 35 கிலோவுக்கு மேற்பட்ட எடையிலான பார்சல்களை வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கு நேரில்
சென்று பெற்றுக்கொண்டு ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் அவை ரயிலில் எடுத்து செல்லப்பட்டு
சேரவேண்டிய முகவரிக்கு நேரில் கொண்டு சென்று விநியோகிக்கும் பணியை அஞ்சல் துறை ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த கூட்டு பார்சல் விநியோக சேவைக்கு நியாயமான கட்டணம் நிர்ணயம், மூன்றாம் நபர் காப்பீடு அளிக்கப்படும்.
பார்சலைப் பெற்றுக்கொள்வது முதல் அதை விநியோகம் செய்யும் வரையிலான பணியில், வாடிக்கையாளருக்கான
தொடர்பு அலுவலகமாக இந்திய அஞ்சல் துறை செயல்படும். இந்த சேவையை பெற விரும்புவோர் bd.chennaicity@
indiapost.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 044 28594761, 28594762 என்ற எண்களை தொடர்பு
கொள்ளலாம்.
2014 க்குப் பிறகு மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஓவ்வொரு நிறுவனங்களின் செயல்பாடுகளில் இந்தியாவின்
முன்னேற்றம் மெருகேறியுள்ளதை இந்தியாவில் உள்ள கடைக்கோடி மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பதே
உண்மை.