கவர்னர் உரையின்போது சட்டசபையில் நடந்தவை குறித்து பெரும்பாலான பத்திரிகைகள் அரசின் நிலைக்கு ஆதரவாக எழுதி, கவர்னரையே குற்றம் சாட்டுகின்றன.
அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்களா, நாம்தான் தவறாகப் புரிந்து கொண்டு விட்டோமா என்ற சந்தேகம் ஏற்பட்டு factual error எதுவும் வந்து விடக்கூடாதே என்று பலமுறை சரி பார்த்து எழுத வேண்டியிருக்கிறது.
கவர்னர் பேச ஆரம்பித்ததும் கூட்டணிக் கட்சிகள் அவருக்கு எதிராக கோஷம் இட்டதை பெரும்பாலான பத்திரிகைகள் கண்டிக்கவில்லை. அவர்களை முதல்வரோ சபாநாயகரோ கட்டுப்படுத்தாதது தவறு என்று யாரும் கூறவில்லை. விதிக்கு மாறாக , கவர்னரை வைத்துக்கொண்டு அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததை பலரும் நியாயப்படுத்துகின்றனர்.
தர்மசங்கடத்தைத் தவிர்க்க கவர்னர் எழுந்து போனது தேசிய கீத அவமதிப்பு என்று திரித்துக் கூறப்படுகிறது.
உரையை கமா, ஃபுல் ஸ்டாப் கூட மாற்றாமல் படிப்பதுதான் ஆளுநரின் வேலை என்று பிரபல பத்திரிகையாளர்கள்
பேட்டியளிக்கின்றனர். கொள்கைகள், திட்டங்கள், உண்மையான சாதனைகள் பற்றிய விவரங்களை மாற்றக்கூடாது என்பது சரிதான்.
‘இந்தியாவுக்கே முதல்வர் வழி காட்டுகிறார். முதல்வரின் சாதனைகளை வெளிநாடுகளே பாராட்டுகின்றன. எங்கும் மகிழ்ச்சி பொங்குகிறது’ என்று கட்சிப் பத்திரிகை பாணியில் எழுதியிருந்தாலும் கவர்னர் அப்படியே படிக்க வேண்டும் என்றா சட்டம் கூறுகிறது? பின் ஏன் பல பத்திரிகைகளும் சொல்லி வைத்தது போல் ஒரே கோட்டில் பயணிக்கின்றன? புரியவில்லை. யாருக்காவது புரிந்தால் சொல்லுங்கள் நன்றி: துக்ளக் சத்யா முகநூல் பதிவிலிருந்து…