காலம் சென்ற சிவசேனா நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின், 97வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி
வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: பால் தாக்கரேயுடன் உரையாற்றும் நல்வாய்ப்பு, எனக்கு பலமுறை
கிடைத்து உள்ளது. சிறந்த அறிவு ஞானம் உடைய அவர், மக்கள் நலனில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சிவசேனையுடன் கூட்டணி இல்லாத நிலையில் அவரது நினைவுகளை பகிர்ந்த
பிரதமர் மோடியின் பதிவு சிவசேனா கட்சியினர் இடம் வரவேற்பை பெற்றுள்ளது.