நேற்றைய தினம் (23.01.2023) நேதாஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்
கூறியதாவது: நம் நாட்டின் விடுதலைக்காக போராடியதற்காக சுபாஷ் சந்திர போசுக்கு எங்களுடைய வாழ்த்தையும்,
நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம். நம் நாடு உலகின் தலைமையை ஏற்க வேண்டும் என்ற தன் கொள்கையை
எங்களுக்கு ஊட்டியதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். பாதைகள், கொள்கைகள் வேறாக
இருந்தபோதும், இலக்கு ஒன்றாக அமைந்துள்ளது. அவருடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு
உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.