நேதாஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று (23.01.2023) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ஆளுநர்
மாளிகையில் நேதாஜியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, பேசிய அவர், பாரதத்தின்
வரலாறு மற்றும் பாரத சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை. சுதந்திர போராட்ட வரலாறு
மாற்றி எழுதப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே சுதந்திர போராட்டத்தில் பதிவு
செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார். வரலாற்றுத் திரிபுகள் பற்றியும் அவற்றை மாற்றி எழுத வேண்டும் என்பது
பற்றியும் தமிழக ஆளுநர் தொடர்ந்து குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.