மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்திற்காக பயோ டெக் குழுவை மத்திய அமைச்சர்
டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டி பேசுகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் என்ற முறையில்,
அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரித் தொழில்நுட்பத் துறை (டி.பி.டி) மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனமான
பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் (BIRAC) ஆகியவை இந்த மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு
மருந்து உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பைச் செய்திருப்பது குறித்து பெருமைப்படுகிறேன். இதை சாத்தியமாக்கிய
முழு புகழும் பிரதமர் நரேந்திர மோடியைச் சேரும். அவரது தனிப்பட்ட ஊக்கம் மற்றும் கண்காணிப்பு தான் கொரோனா
தடுப்பூசி உற்பத்தியில் பாரதத்தை தற்சார்பு எட்ட உதவியது. இது உலக அளவில் பாரதத்தின் அந்தஸ்தை உயர்த்தியது.
இது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை அளிக்கும் விஷயம். மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தின் தயாரிப்பு
மேம்பாடு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு “மிஷன் கோவிட் சுரக்ஷா” இயக்கத்தின் கீழ் உயிரி தொழில்நுட்பத்
துறை மற்றும் பி.ஐ.ஆர்.ஏ.சி மூலம் நிதியளிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட
வயதினருக்கான பயன்பாட்டின் கீழ் முதல் இரண்டு தவணை மற்றும் பூஸ்டர் டோஸ்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது”
என்று தெரிவித்தார்.