சுதந்திர போராட்ட வீரர் திரு வ உ சிதம்பரனாரின் 150 வது ஜெயந்தி விழா வரவுள்ளதை அடுத்து தமிழக அரசு சார்பில் அவரது நினைவு மலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வ உ சிதம்பரனாரின் அசல் கையொப்ப பிரதியிலிருந்து பிள்ளை என்ற சொல்லை நீக்கி வ. உ.சிதம்பரம் என்று குறிப்பிடப்பட்டு இறந்தவர் கையெழுத்தில் ஃபோர்ஜரி செய்துள்ளது திராவிட மாடல் அரசு.
சாதி நீக்கம் மத அடையாள அழிப்பு என்று தொடர்ந்து இந்து மத கட்டமைப்புகளை அழிப்பதும் திரிப்பதுமாக வள்ளுவ நாயனார் முதல் அவ்வையார் வரை தொடர்ந்து அவமதித்து வரும் நிலையில் கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமைக்குரிய பிரிட்டிஷாரிடம் பொருளாதார யுத்தம் நடத்தி சிறையில் செக்கீழுத்த மாமனிதரை நான் சிறையில் இழுத்தது செக்கில்லை. அது பாரத தேவியின் தேர் என்று நெஞ்சம் நெகிழ்ந்த தியாக சீலரை அவரின் அசல் அடையாளத்தை அழிக்கும் விதமாக அவரின் சாதிய அடையாளத்தை பறிக்கும் வகையில் பிள்ளை என்ற அடையாளத்தை நீக்கீ பெயரை குறிப்பிட்ட திமுக அரசின் அராஜக போக்கு சிதம்பரனாரின் வாரிசுகள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
சுதந்திர போராட்ட வீரர்கள் குடும்பத்தினர், வரலாற்று ஆய்வாளர்கள், இந்து தேசிய ஆர்வலர்கள், பிள்ளைவால் சமூக மக்கள் ஆகியோருடம் இருந்து இதற்குக் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நடவடிக்கை மத்தியிலும் திமுக அரசு மீதான அதிருப்தியை அதிகரிக்க செய்திருக்கிறது.