நாட்டின் 74 வது குடியரசு தின நிகழ்ச்சியில் நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கும், வருவாய் உயர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதற்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கியிருந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் “தமிழ்நாடு எங்கே போகிறது? தமிழ்நாட்டில் மது விலக்கை நடைமுறைப்படுத்துவதாக அரசு அறிவிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்து தனது வேதனையை வெளியிட்டுள்ளார். இது குறித்து பாமக தலைவர் ராமதாஸ் கூறியிருப்பதாவது” டாஸ்மாக் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இத்தகைய பாவங்களுக்கு பரிகாரம் தேடவும், மக்களைக் காக்கவும்\ தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படு த்துவதாக அரசு அறிவிக்க வேண்டும் ! எனக் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக தொடர்ந்து சமுதாயத்தை சீரழிக்கும் மது மற்றும் திரைப்படத்தை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.