- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறைக்கு 2.70 லட்சம் கோடி
- கல்வித்துறைக்கு ரூ. 1,12,809 கோடி
2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இது நாட்டின் 76 வது நிதிநிலை அறிக்கையாகும் . அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, திட்டங்கள் கடைக்கோடி வரை சென்றடைதல், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறனை வெளிக்கொண்டு வருதல், பசுமை வளர்ச்சி , இளைஞர் பலம் , நிதித்துறை என 7 முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பட்ஜெட்.
தனிநபர் வருமான உச்ச வரம்பு, வேளாண் கடன், பிரதமந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி, சிகரெட்டிற்கான வரி அதிகரிப்பு என நாட்டின் நலனில் அக்கறை கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கியுள்ளார். அம்ரித் கால் ( புதியதின் தொடக்கம்) என்ற முழக்கத்தோடு சாமானிய மக்கள் முதல் இந்தியாவின் தொழில்முனைவோர், தொழில்நுட்ப வளர்ச்சி, விவசாய ஊக்குவிப்பு என அனைத்துப் பிரிவின் நலனையும் கருத்திற்க் கொண்டு தயாரிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட். அவற்றிலிருந்து சில முக்கியமானவைகளை இங்கே காண்போம்.
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ. 7 லட்சம், இயற்கை விவசாயத்தில் 1 கோடி விவசாயிகளுக்கு உதவி,
பாதுகாப்புத்துறைக்கு 5.94 லட்சம் கோடி.
- புதிய தனிநபர் வருமான வரி திட்டத்தில் சேர்ந்துள்ளவர்கள் வரித்தள்ளுபடி பெறுவதற்கான வரம்பு 7 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 2.மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் டெபாசிட் செய்வதற்கான வரம்பு 15 லட்ச ரூபாயிலிருந்து 30 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
3.வேளாண் கடன் அளவு இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் ஒரு கோடி விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படும்.
- மகளிர் சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் 2 லட்ச ரூபாய் வரை டெபாசிட் செய்யும் தொகைக்கு 7.5 சதவீத வட்டி அளிக்கும் வகையில் மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் என்கிற புதிய திட்டம் அறிமுகம்.
- ரயில்வேத்துறைக்கு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 66 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 79,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
- நாடெங்கிலும் உள்ளூர் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிபேடுகள், ஏரோடிராம்கள் அமைக்கப்படும்.
- 9.சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கான புதிய கடன் உத்தரவாத திட்டம் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வரும் ஏப்ரல் 1ந்தேதி முதல் அமல்படுத்தப்படும்.
- புவி வெப்பமடைதலுக்கு காரணமான நச்சுவாயு வெளியேற்றத்தை பூஜ்யம் அளவு குறைக்கும் இலக்கை அடைவதற்காக 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- 11.பழங்குடியினருக்கான 740 ஏகலைவா மாதிரி பள்ளிகளுக்காக 38,800 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
- சிகரெட்டிற்கான சுங்கவரி 16 சதவீதமாக அதிகரிப்பு.
- தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு.
- பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி வரி குறைப்பு.
- தொலைக்காட்சி பெட்டிகளின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு.
- செல்போன், கேமிராலென்ஸ் உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியும் குறைப்பு.
- இணையவழி நீதிமன்ற திட்டத்திற்கான மூன்றாம் கட்ட செயல்பாட்டிற்கு 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- பாதுகாப்புத்துறைக்கு 5.94 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் டிஜிட்டல் சேவை திட்டத்தின் பலன்களை பெற பான் கார்டை பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
- நாட்டில் 5 ஜி சேவையை மேம்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் நாடெங்கிலும் 100 ஆய்வகங்கள் பொறியியல் நிறுவனங்களில் ஏற்படுத்தப்படும்.
- நாட்டில் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்.
- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறைக்கு 2.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- 23.மூலதன முதலீட்டு திட்டங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி மாநில அரசுகளுக்கு நிதி உதவி செய்யும் திட்டம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு. இதற்காக 1.3 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவத்தினருக்காக தேசிய டிஜிட்டல் நூலக திட்டம் செயல்படுத்தப்படும்.
- கல்வித்துறைக்கு 1,12,809 கோடி ரூபாய் 2023-2024ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வேளாண்துறையில் இளைஞர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ஊக்குவிப்பு நிதி ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.