ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட 12 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துமனையில் சேர்க்கபட்டுள்ளனர்.
பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி துவக்கப்பள்ளியில்,சத்துணவுடன் முட்டை சாப்பிட்ட, 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த பள்ளியில் மொத்தம் 240 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மதியம், 140 பேர் சத்துணவு சாப்பிட்டனர். முதல் சுற்றில், 128 மாணவர்கள் முட்டையுடன் சத்துணவு சாப்பிட்டனர். அடுத்ததாக, 12 மாணவர்களுக்கு முட்டை இல்லாததால், புதிதாக வேக வைத்து முட்டை வழங்கினர். அந்த முட்டைகளை சாப்பிட்ட நான்கு மாணவியர் உட்பட 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வயிற்று வலியால் துடித்தனர். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவத்துக்கு பாஜக மாநிலத தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பலமுறை இதுபோன்ற புகார்கள் வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், அழுகிய முட்டை அமைச்சர் என அத்துறை அமைச்சர் கீதா ஜீவனை சாடியுள்ளார். தரமற்ற சத்துணவைக் கொடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களின் உடல் நலனில் விளையாடுவதை திறனற்ற திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்..