பயணிகள் பிரிவில் 73% வருவாய் அதிகரிப்பு : சாதிக்கும் ரயில்வே அமைச்சகம்

ரயில்வே பயணிகள் பிரிவின் வருவாய் 73 சதவீதம் அதிகமாகி உள்ளது. என ரயில்வே அமைச்சகம் அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

இது சமந்தமாக அமைச்சகம் வெளியீட்டுக்குள்ள அறிக்கை ஒன்றில்: கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரை பயணிகள் பிரிவில் ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ. 54733 கோடி . கடந்த ஆண்டு இதே காலத்தில் வருவாய் ரூ.31,634 கோடியாக இருந்தது. இது 73 சதவீத உயர்வாகும். 2022 ஏப்ரல் 1 முதல் 2023 ஜனவரி 31 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் தோராயமான எண்ணிக்கை 65.90 கோடியாகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 61.81 கோடியாக இருந்தது. இது 7 சதவீதம் அதிகரிப்பாகும். 2022 ஏப்ரல் 1 முதல் 2023 ஜனவரி 31 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில் இருந்து ரூ.42,945 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.29,079 கோடியாக இருந்தது. 48 சதவீத அதிகரிப்பாகும். 2022 ஏப்ரல் 1 முதல் ஜனவரி 31, 2023 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில் இருந்து கிடைத்த வருவாய் ரூ.11788 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.2,555 கோடியாக இருந்தது, இது 361 சதவீத உயர்வாகும். என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top