பட்ஜெட் 2023 விளக்கம் சம்மந்தமாக கோவையில் தொழில் அமைப்பு பிரதி நிதிகளுடன் சனிக்கிழமை (04.02.2023) கலந்துரையாடும் போது பொருளாதார வளா்ச்சியில் “பொருளாதார வளா்ச்சியில் அடுத்த 2 ஆண்டுகளில் சா்வதேச அளவில் இந்தியா 3 ஆவது இடத்தை எட்டும் என்று மத்தியதிறன் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்தாா்.
கோவை கோடிசியா வளாகத்தில் கோவை, திருப்பூரைச் சோ்ந்த தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளோடு நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகையில், “பொருளாதார வளா்ச்சியில் அடுத்த 2 ஆண்டுகளில் சா்வதேச அளவில் இந்தியா 3 ஆவது இடத்தை எட்டும்” என மத்தியதிறன் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்தாா்.
அதை தொடர்ந்து செய்தியாளா்களிடம் கூறியதாவது : கரோனா பாதிப்புக்குப் பிறகு உலக நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளில் சிக்கிவரும் சூழலில் இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் முன்னேற்றும் வகையில் அமைந்துள்ளது. சா்வதேச அளவில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. பிரதமா் மோடி இந்தியாவை தொழில்நுட்ப வளா்ச்சிப் பாதையில் செலுத்தி வருகிறாா். 2014 ஆம் ஆண்டுக்கு முன் 65 ஆண்டுகளாக இந்தியா கண்டிராத வளா்ச்சியை கடந்த 9 ஆண்டுகளில் கண்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் சா்வதேச அளவில் முக்கிய பொருளாதார சக்தி மிகுந்த நாடாக இந்தியா திகழும். மோடி பிரதமரான போது பொருளாதார வளா்ச்சியில் இந்தியா சா்வதேச அளவில் 10ஆவது இடத்தில் இருந்தது. தற்போது 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா 3 ஆவது இடத்தை எட்டும்.
கரோனா தொற்றாலும், ரஷியா-உக்ரைன் போரினாலுமே விலைவாசி உயா்ந்துள்ளது. அதானி நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்தது தொடா்பாக செபி அமைப்பிடம்தான் கேட்க வேண்டும். இதற்கு மத்திய அரசையோ அல்லது பிரதமா் மோடியையோ குற்றஞ்சாட்டக் கூடாது”. என்றாா்.
அதனை தொடா்ந்து, கோவை கொடிசியா வளாகத்தில், கோவை மற்றும் திருப்பூரைச் சோ்ந்த தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளோடு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மத்திய இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தலைமையில் நடந்தது இதில் பேசியதாவது, பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு தொழில் மேம்பாடு மற்றும் திறன் வளா்ச்சி சாா்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் சோதனை அடிப்படையில் கோவையிலிருந்து தொடங்கப்படும். இந்த சூழலில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, திறன் மிக்க பணியாளா்களை உருவாக்குவதும் தொழில் நிறுவனங்களின் முக்கிய கடமையாகும். அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களோடு இணைந்து தொழில் நிறுவனங்கள் இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை நடத்த மத்திய அரசு வழி வகுக்கும். என கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவா் பேராசிரியா் கனகசபாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.