உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வை தேடி பாரதம் வருகிறார்கள் : மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வை தேடி பாரதம் நோக்கி வரும் சூழல் உருவாகியுள்ளது என  மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில், (04.02.2023) விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், ‘புதிய இந்தியா பல வாய்ப்புகள்’ என்னும் நிகழ்ச்சியில் மதிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றார். இதில் மத்திய அமைச்சர்க்கு பல்கலைக் கழக வேந்தர்  நினைவுப்பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “பாரதம் ஒரு மிகப்பெரிய மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. உலக அளவில் மற்ற நாடுகளுக்கு சேவை செய்வதில் நமது நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் பார்க்காத மாற்றங்களை, கடந்த எட்டு ஆண்டுகளில் நாம் பார்த்து கொண்டு வருகிறோம். இன்று, உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வை தேடி பாரதம் நோக்கி அவர்கள் வரும் சூழல் உருவாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் பிரச்னைக்கு பாரதத்தால் மட்டுமே தீர்வு கொண்டுவர முடியும் என்ற சூழல் உலகளவில் உருவாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக நமது நாட்டின் பொருளாதாரம், 11வது இடத்தில் இருந்தது. ஆனால் மிக வேகமாக தற்போது வளர்ந்து வருகிறது.

விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை நாம் அடையப் போகிறோம். உலகில் இரண்டாவது உள்நாட்டு பயண போக்குவரத்து கொண்ட நாடாகவும் சர்வதேச அளவில் பயணிகள் போக்குவரத்தில் 7வது இடத்திலும் பாரதம் உள்ளது. சுதந்திரம் அடைந்த 67 ஆண்டுகளில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில் பிரதமர் மோடியின் கடந்த 8 வருட ஆட்சி காலத்தில் புதிதாக 73 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 147 விமான நிலையங்கள் நாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்த மாதம் பிரதமர் மோடி 148வது விமான நிலையத்தை திறந்துவைக்க உள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளில் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200க்கும் மேல் கொண்டு செல்லும் திட்டம் உள்ளது. 2013ல் நாட்டில் 400 விமானங்கள் இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 700 ஆக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1,500 ஆக அதிகரிக்கும். விமான போக்குவரத்து துறை மூலம் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்கள் பங்களிப்பு முக்கியமானது. உலக அளவில் 5 சதவீதம் பெண் விமானிகள் உள்ள நிலையில் பாரதத்தில் 15 சதவிகித பெண் விமானிகள் உள்ளனர்’ என மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top