ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுவுக்கு பாஜக தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும் இடைக்காலப் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பொதுநலன் கருதி வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றிகளையும் கூறியுள்ளார்.
பாஜகவின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இடைத்தேர்தல் வெற்றி வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும் வண்ணம் அமைக்க கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்