பரமக்குடி அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட 12 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துமனையில் சேர்க்க பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி துவக்கப்பள்ளியில்,சத்துணவுடன் முட்டை சாப்பிட்ட, 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த பள்ளியில் மொத்தம் 240 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மதியம், 140 பேர் சத்துணவு சாப்பிட்டனர். முதல் சுற்றில், 128 மாணவர்கள் முட்டையுடன் சத்துணவு சாப்பிட்டனர்.
அடுத்ததாக, 12 மாணவர்களுக்கு முட்டை இல்லாததால், புதிதாக வேக வைத்து முட்டை வழங்கினர்.
அந்த முட்டைகளை சாப்பிட்ட நான்கு மாணவியர் உட்பட 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வயிற்று வலியால் துடித்தனர். இதைஎடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில், சேர்க்கப்பட்டுள்ளனர். இது போன்ற சூழலில் முதல்வர் ரயிலில் பயணம் செய்து காலையில் ஏதாவது ஒரு பள்ளிக்கு சென்று காலில் செருப்புடன் உணவு பரிமாறி போட்டோ சூட் நடத்தி வருகிறார். நாடகத்தை விட்டு விட்டு சத்துணவு தயாரிப்பில் ஏதேனும் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதா என்று திமுக அரசு விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கருத்தும், அத்திருப்தியும் தெரிவித்து வருகின்றனர்.