மறைந்தார் வாணி ஜெயராம்: பாஜக தேசிய மகளிர் அணி வானதி சீனிவாசன் இரங்கல்.

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று (4.02.2023) தனது வீட்டில் காலமானார்.

முகநூலில் வானதி சீனிவாசன் இரங்கல்.

மீரா ஆப் மாடர்ன் இந்திய என்றும் அழைக்கப்பட்ட இவருக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்ம விபூஷண்
விருது அறிவித்திருந்தது. விருதை பெறுவதற்கு முன் இவர் காலமானது இசை ரசிகர்களிடம் மிகுந்த
வேதனையை அளித்திருக்கிறது.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்ததாவது: “ஆயிரத்திற்கும்
அதிகமான திரைப்படங்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இசைக் கலைஞர் திருமதி வாணி ஜெயராம் அவர்கள் மறைவு செய்தியறிந்து பெரும் துயரம் அடைந்தேன். அரை நூற்றாண்டு காலம் தனது இனிய குரலால், இசை உலகின் ராணியாக வலம் வந்தவர். மிகச்சிறந்த தேச பக்தர். பல்வேறு நிகழ்ச்சிகளில் தேசப் பக்தி பாடல்களைப் பாடியவர். அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவர், குடியரசுத் தலைவரின் கரங்களால் பெறாமலேயே நம்மிடம் இருந்து விடை பெற்று சென்றிருப்பது பெரும் துயரத்தை அளிக்கிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமதி வாணி ஜெயராம் மறைந்தாலும், பாடிய பாடல்கள் மூலம் அவர் என்றும் வாழ்வார். சென்று வாருங்கள் அம்மா…” என தனது முக நூல் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top