தொடர்ந்து பள்ளிகளில் தரமற்ற உணவை சாப்பிட மாணவர்களுக்கு உடல் நலன் பாதிக்கபட்டு வருவதாக செய்திகள் வருகிறது. இது பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் செயல்படும் அழுகிய முட்டை, அமைச்சர் கீதா ஜீவன் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பரமக்குடி நகராட்சி துவக்கப் பள்ளியில், சத்துணவு, முட்டை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தனது சமூக ஊடகத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “பரமக்குடி நகராட்சி துவக்கப் பள்ளியில், சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிந்தேன். பலமுறை பள்ளி சத்துணவு உண்ட மாணவர்கள் உடல்நலன்
பாதிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்தும், கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் செயல்படும் அழுகிய முட்டை, அமைச்சர் கீதா ஜீவன், மேடைகளில் வசனம் பேசுவதை நிறுத்தி விட்டு, தனது துறைப் பணிகளை ஒழுங்காகக் கவனிக்க வேண்டும்.
தரமற்ற சத்துணவைக் கொடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களின் உடல் நலனில் விளையாடுவதை திறனற்ற தி.மு.க அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என கண்டித்துள்ளார்.