தமிழ்நாட்டில் ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் : மத்திய அரசு தகவல்

தமிழகத்திற்கு என்று 2023 – 2024 மத்திய பட்ஜெட்டில் ஒன்பது புதிய ரயில் வழித்தடங்களுக்கு ரூ.1,057 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் அமைக்க மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதன் மூலம், தமிழகத்தில் ரயில்வே நெட்வொர்க் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இது 2013-2014 இல் வழங்கப்பட்ட தொகையை விட ஒன்பது மடங்கு அதிகம் என்றும், 2023-2024 நிதியாண்டில் ₹1.40 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது இரு மடங்காக ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். இந்த நிலையில், மத்திய அரசு ரயில்வேக்கு ஒதுக்கிடு செய்துள்ள ரூ. 2.40 லட்சம் கோடியில் இருந்து ரூ.1057 கோடி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 9 புதிய வழித்தடத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாமல்லபுரம், பாண்டி வழியாக (155 கி.மீ.) சென்னை-கடலூர் இடையேயான ரயில் பாதைக்கு ரூ.50 கோடி நிதி வழங்கப்பட்டது, இந்த ஆண்டு இறுதிக்குள் இட கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட உள்ளது.

1) செங்கல்பட்டு-மாமல்லபுரம்-புதுச்சேரி-கடலூர், 2) திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, 3) திண்டிவனம்-ஆரணி- வாலஜா, 4) நகரி, மொரப்பூர்-தர்மபுரி,

5) அட்லபட்டு-புட்டூர், 6) ஈரோடு-பழனி, 7) மதுரை-அருப்புக்கோட்டை- தூத்துக்குடி, 8) ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி, 9) ராமேஷ்வரம்-தனுஷ்கோடி ஆகிய புதிய பாதைகள் அமைக்கப்பட உள்ளது.

திண்டிவனம்-நகரி இடையே 180 கி.மீ பணிக்காக ரூ200 கோடியும், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாலை இடையிலான 70கி.மீ பாதைக்கு ரூ.100 கோடியும், மொரப்பூர்-தர்மபுரி இடையிலான 36கிமீ தடத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரு தடங்களுக்கு இடையே 8 ரயில்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தாம்பரம்-திருவண்ணாமலை இடையே ரயில் இணைப்பு வரும் பட்சத்தில் 163 கி.மீ பாதையாக இருக்கும். ஆனால் தற்போது சென்னை வாசிகள் திருவண்ணாமலை செல்ல 225 கி.மீ காட்பாடி, வேலூர் வழியாக சுற்றிச் செல்ல கால
தாமதமாகிறது. மொரப்பூர்-தர்மபுரி இடையே புதிய தடம் சென்னையை இணைக்கும் வகையிலும் பெங்களூரு- ஹோசூர் பாதைக்கு மாற்றாகவும் இருக்கும். சரக்குப் போக்குவரத்துக்காக எண்ணூர் துறைமுகம் அட்டிபட்டு-புத்தூர் இடையிலான 88கி.மீ, ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி(இருங்காட்டுக்கோட்டை-ஆவடி) 60கி.மீ பாதைகள் முறையே ரூ.50 கோடி, ரூ.57.90 கோடியில் அமைக்கப்பட இருக்கிறது. மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி பாதைக்காக ரூ.114 கோடியும், ஈரோடு-பழனி இடையே புதிய பாதைக்கு ரூ.50 கோடியும், ராமேஷ்வரம்-தனுஷ்கோடி இடையிலான புதிய வழித்தடத்துக்கு ரூ.385.90 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய ரயில் திட்டம் 2050 வரைவு, யுனெஸ்கோ தளமான மாமல்லபுரம் மற்றும் மூன்று இடங்களுக்கு ரயில் இணைப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top