நாகர்கோவிலில் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இளைஞரை போலீசார்(11.02.2023) கைது செய்தனர்.
விசாரணையின் பொது கன்னியாகுமரி மீராசா ஆண்டவர் பள்ளிவாசலின் இமாம் முகமது அலி. இவருக்கு இரு மனைவியர். இரண்டாவது மனைவியின் மகன் அல் அனீப், என்பதும் தெரிய வந்தது. இவர் நண்பர்களுடன் சேர்ந்து நாகர்கோவிலில் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கோட்டாறு போலீசார் இன்று அவரை நாகர்கோவிலில் கைது செய்தனர். மதகுரு முகமது அலி மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தந்தை, மகன் பற்றியும், இவர்களின் கஞ்சா தொடர்பு பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.