மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை ஏற்கனவே கட்டிவிட்டார்!!

தருமி: என்ன சொக்கா சொல்லறப்பு, தமிழ்நாட்டில எதிர்கட்சிக்காரன் போறா ஒன்னு சொல்லிக்கிட்டி திரியிறான்
நீ என்னடான்னா மோடி கட்டிவிட்டார்னு சொல்லுற…

சொக்கா: நாஞ் சொல்றது நிசம்.. பொறுமையா கேளூ, அதுக்கு முன்னால இப்ப தோப்பூர் வளாகத்தில கட்டபோற எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வகுப்புகள்
2022 ஏப்ரல் மாதத்திலிருந்து இராமநாதபுரம் மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது.

தருமி: கட்டிடமே இல்லாம ஆனா வகுப்புகள் துவங்கிவிட்டதா…

சொக்கா: ஆமா 2019ல் அடிக்கல் நாட்டப்பெற்ற தோப்பூர் வளாகத்தில் இன்று கட்டிடம் இல்லை என்பதும் உண்மைதான்…

தருமி: பின்ன எப்படி மோடி ஏற்கனவே கட்டிக்கொடுத்துவிட்டார் என்று சொல்லுகிறீர்கள்…

சொக்கா: 2003ல் வாஜ்பாயி அவர்கள் டெல்லியிலுள்ள எய்மஸ் வளாகத்திலுள்ள வசதிகள் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்கவேண்டுமான்றால் பிராந்தியந்தோறும்
எய்ம்ஸ் மருத்துவம்னை கட்ட வேண்டும் என்று திட்டமிட்டார்.

ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையில், கேன்சர் நோய், இருதய நோய், மூளை நரம்பியல் எனப் பல்வேறு அதிதீவிர சிகிச்சை தேவைப்படும் 20க்கும் மேற்பட்ட துறைகள், 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, ஆராய்ச்சி வளாகம் என 1000கோடி முதலீடு தேவைப்படும், நாடு முழுவதும் மாநிலந்தோறும் எய்ம்ஸ் ஏற்படுத்த வேண்டும்மாயின், 30 மாநிலங்களுக்கு சுமார் 30 மருத்துவமனைகளுக்கு 30000 கோடி தேவைப்படும். அன்றைய அளவில் அது ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையில் 10% ஆகும், ஆக அவர்கள் மற்றுமொரு திட்டத்தினை தீட்டுகின்றனர். அதுதான் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை.

சில பகுதிகளில், உதாரணமாக கோவை பகுதியினில் பஞ்சு தொழிற்சாலையினால் ஏற்படும் சுவாச கோளாறுகள், தஞ்சை பகுதியில் ஏற்படும் விவசாய தொழிலாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள், சிவகாசி பகுதியினில் வெடி மருந்து தொழிற்சாலைகளினால் மக்களுக்கு ஏற்படும் வியாதிகளுக்கு என அந்தந்த பிராந்தியங்களில் அதிகமாக இருக்கும் மக்களின் வியாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் சிறப்பு பிரிவுகளை மட்டும் உள்ளடக்கிய மருத்துவமனை வளாகங்களை ஏற்படுத்த 100கோடி முதல் 200கோடி மட்டும் போதும்.

அதாவது சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துமனையில் 7-8 துறைகளை உள்ளடக்கி 50 முதல் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ வளாகங்களை ஏற்கனவே செயற்பட்டுக்கொண்டிருக்கும் மாவட்ட மருத்துவமனையில் ஏற்படுத்துவது திட்டமாகும்.

வாஜ்பாயி ஆட்சியில் 6 எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் அறிவிக்கப்படுகிறது.

2004ல் ஆட்சி மாறுகின்றது. காங்கிரசு அரசும் திட்டங்களை மேற்கொள்கிறது.

2006ல் சூப்பர் ஸ்பெசாலிட்டி திட்ட்ங்களை முதல் கட்டத்தில் சேலம் உட்பட 10 இடங்களில் நாடு முழுவதும் அறிவிக்கின்றனர்.


மத்திய அரசு 100கோடியும் மாநில அரசு 20கோடியும் ஒதுக்கி திட்டம் நடைபெற்றது. அப்பொழுது ஆண்ட கட்சியினை சார்ந்தோர் எய்ம்ஸ் போன்ற ஒரு மருத்துவமனையை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று திமுக, காங்கிரசு, பாமக என அனைவரும் சொந்தம் கொண்டாடினர்.

2009ல் இரண்டாம் கட்டமாக மதுரை உட்பட ஆறு இடங்களுக்கு கேபினட் அமைச்சரவை குழு ஒப்புதளித்தது.
மத்திய அரசின் பங்கு 125கோடி மாநில அரசின் பங்கு 25கோடியும் திட்டத்திற்கு தேவை என அறிவிக்கப்பட்டது.

“ஆஹா மதுரையிலும் எய்ம்ஸ் என்று அரசியல் கட்சிகள் கொண்டாடின”.

2011ல் சேலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ வளாகம் முன்னால் முதலமைச்சர் திரு. கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

2009ல் அறிவிக்கப்பட்ட மதுரை மருத்துவமனை சூப்பர் ஸ்பெசாலிட்டி வளாகத்திற்கு ஒரு செங்கல் வைக்க கூட நிதி ஒதுக்கப்படவில்லை..

அன்று அரசின் இரண்டாம் இடத்திலிருந்தவர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் ஆவார். மதுரை அவரது சொந்த தொகுதியிலிருந்து கூப்பிடும் தூரத்திலிருந்தது.

யாரும் கேள்வி கேட்கவில்லை…

2013 நவம்பரில் மீண்டும் 13 இடங்களில் தஞ்சாவூர், திருநெல்வேலியில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ வளாகம் கட்ட மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதளித்தது.

முதலில் 2009ல் அறிவித்த மதுரை திட்டத்திற்கு எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை இதில் மேலும் 2 இடங்களுக்கு எவ்வாறு நிதி ஒதுக்குவர்.. என யாரும் கேள்வி எழுப்பவில்லை.. பத்திரிக்கைகளும் வாய் மூடி மவுனமாக இன்றளவும் உள்ளனர்.

2014ல் மோடி பிரதமரான பிறகு இந்த அனைத்து திட்டங்களும் புத்தணர்ச்சி பெறுகின்றது.
2015ல் 200கோடி அளவில் திட்டம் மீண்டும் அறிவிக்கப்பட்டு, 150கோடி மத்திய அரசும் 50கோடி மாநில அரசும் அளித்து 2019ல் மூன்று இடங்களிலும்
சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை வளாகம் திறக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் பங்களிப்பாக 450கோடிக்கும் அதிகமாக மோடி கொடுத்தார்.

மதுரை சூப்பர் ஸ்பெசாலிட்டி வளாகத்திலுள்ள சிறப்பம்சங்கள்…

  1. நரம்பியல் வளாகம்
  2. சிறுநீரகவியல் வளாகம்
  3. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை
  4. யூராலஜி வளாகம்
  5. 200க்கும் மேற்பட்ட படுக்கைவசதியுடன் கூடிய இரைப்பை சம்பந்தம்பட்ட சிகிச்சை வளாகம்
  6. 30க்கும் மேற்பட்ட படுக்கைவசதியுடன் கூடிய நுண் இரத்த சிகிச்சை சம்பந்தபட்ட வளாகம்
  7. 50 படுக்கைகளூடன் கூடிய புதிய ஐசியு வளாகம்

தருமி: என்ன சொக்கா சொல்லுற 2009ல் அறிவித்த திட்டத்திற்கு, 2014வரை 1ரூ கூட காங்கிரசு ஆளும் அரசு ஒதுக்கவில்லையா…

சொக்கா: அதுமட்டுமா.. மோடி 11 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் புதிதாக மருத்துவமனை கட்ட 1800கோடிக்கும் அதிகமாக 2019ல் ஒதுக்கி 2021ல் திறந்து வைத்துவிட்டார். எண்ணற்ற சுகாதார மையங்கள் மோடியின் ஆட்சியில் கட்டப்பட்டு வருகின்றது. ஏறக்குறைய தமிழ்நாட்டிற்கும் மட்டும் 3000கோடி முதல் 5000கோடி வரை மருத்துவ திட்டங்களுக்கு தந்துவிட்டார்.

இப்ப சொல்லுப்பு மோடி மதுரையில் ஏற்கனவே எய்ம்ஸ் கட்டிக்கொடுத்துவிட்டார்தானே…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top