திருமாவளவனின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய சில நாட்களில் பாஜக பட்டியல் அணி தலைவர் தடா.பெரியசாமியின் வீட்டையும், காரையும் மர்ம நபர்கள் அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி டிஜிபியிடம் பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் திருவாரூரில் நடைபெற்ற விசிக பொதுக்கூட்டத்தில் பாஜக பட்டியல் அணி தலைவர் தடா.பெரியசாமி குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அதற்கு அடுத்த நாள் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தடா.பெரியசாமி, திருமாவளவன் குறித்த உண்மைகளை பொதுவெளியில் போட்டு உடைத்தார். பாஜகவில் இணைவதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொது செயலாளராக இருந்த அவர், திருமாவளவன் குறித்த பல உண்மைகளை பொதுவெளியில் பேசினார்.
திருமாவளவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களையும் மேடையில் தெரிவித்தார்
அவரது இந்த பேச்சு வைரலான நிலையில், குண்டர்கள் அவரது வீட்டை இரவோடு இரவாக கல்வீசி தாக்கினர். மேலும் அவரது கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
இதனிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது; சமீபகாலமாக, தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு எதிர் கருத்துக்கள் உடையோர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர், கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்நாட்டுக்கு தனிகொடி வேண்டுமென்று பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்ட சிஆர்பிஎஃப் ஜவானை, மிரட்டியதுடன் அவரது குடும்பத்தை காலி செய்து விடுவோம் என விசிகவினர் மிரட்டினர்
2023ம் ஆண்டு ஜனவரி மாதம் விசிகவினர் திருவண்ணாமலையில் காவல்துறையினரை மோசமான வார்த்தைகளால் மிரட்டும் வகையில் முழக்கங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். காவல்துறையினரை அவமானப்படுத்தும் வகையில் பேசிய விசிகவினரின் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
தடா.பெரியசாமியின் வீடு மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலும் விசிகவினராலேயே நிகழ்த்தப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது. எனவே இதுபோன்று சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கும் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.