கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபுவை திமுக கவுன்சிலர் அடித்து கொலை செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் அழுத்தத்தினால் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய காலதாமதம் செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் ராணுவ வீரர்களை அடித்து கொலை செய்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக முன்னாள் ராணுவத்தினர் பிரிவு சார்பில் டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது
அதில் கைது செய்யப்பட்டுள்ள திமுக ரவுடிகள் ஒட்டுமொத்த ராணுவத்தினரையும் இழிசொற்களால் வசைபாடியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 124 ஏ, 147, 148, 450, 248B , 302 உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், குண்டர் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பிரபுவின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது