சீன எல்லைப் பிரச்னை குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு அதீத ஞானம் இருந்தால் அவருடைய
கருத்துகளுக்கு நான் மதிப்பளிப்பேன் என்று வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் கிண்டலாகத் தெரிவித்தாா்.
சீன எல்லை விவகாரம் தொடர்பாக பொய்யான கருத்துக்களை கூறிவந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் குற்றம் சாட்டிய
நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘சீன எல்லைப்
பிரச்னை விவகாரத்தில் இந்தியா அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் எல்லைப் பகுதியில் பிரதமா்
மோடி ஏன் ராணுவத்தை அனுப்பி வைத்திருக்க வேண்டும்? இந்திய ராணுவத்தை ராகுல் அனுப்பவில்லை.
ராகுலுக்கு அதீத ஞானம் இருந்தால் அவருடைய கருத்துகளுக்கு நான் மதிப்பளிப்பேன்
வரலாற்றிலேயே அதிக அளவில் சீன எல்லையில் ராணுவத்தை இந்தியா நிறுத்தியுள்ளது. அங்கு உள்கட்டமைப்பு
வசதிக்காக 5 மடங்கு அதிகமாக செலவிடப்படுகிறது.
சீனாவில் இந்திய தூதராக நான் நீண்ட நாள் பதவி வகித்துள்ளேன். நீண்ட காலமாகவே எல்லை பிரச்னை குறித்து
நன்றாகத் தெரியும். இந்த விஷயத்தில் ராகுலுக்கு ஞானம் இருந்தால், அதைப் பற்றி கூறட்டும். அவர் கூறுவதை
ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால், 1958 -இல் கிழக்கு லடாக் பகுதிக்குள் சீனா நுழைந்து 1962-இல் அங்குள்ள பாலத்தை பிடித்தது. இதற்கு
2023-இல் பிரதமா் மோடி அரசை குற்றம் சாட்டுவதா? எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக 1993,
1996 ஆண்டுகளில் அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி சீனாவுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டாா். இதை
எல்லாம் எதிா்க்கட்சியான காங்கிரஸ் நினைவில் கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் ஒப்பிட்டால், இன்று நம்
நாட்டின் நிலை மிகவும் வலிமையானதாக உள்ளது. சர்வதேச அளவிலான பிரச்னைகளில் தற்போது நம் கருத்துக்கு
அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. நாம் தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபித்து உள்ளோம்’ என்றாா்.