2024 பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவதற்கு நடந்து வரும் பணிகளை மேலும் வலிமை
படுத்தும் விதமாக பூத் வலிமைப்படுத்தும் இயக்கம் தேசம் முழுவதும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில்
இந்த இயக்க பணிகளை வெற்றிகரமாக முன் எடுக்கதமிழக பாஜக மாநில அளவிலான குழு அமைந்துள்ளது. இந்த
குழுவில், மாநில பொது செயலாளர் திரு.பொன்.பாலாகணபதி, மாநில செயலாளர் திருமதி டாக்டர். ஆனந்த
பிரியா, மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு. கதலி நரசிங்க பெருமாள், மாநில தலைவர் தரவு
மேலாண்மைபிரிவு திரு. மகேஷ்குமார், மாவட்ட பார்வையாளர் ஈரோடு தெற்கு திரு. பாயிண்ட் மணி, மாவட்ட
பார்வையாளர் சேலம் தெற்கு திரு. அண்ணாதுரை, மாவட்ட பார்வையாளர் தென்காசி திரு. மகாராஜன், மாவட்ட
பார்வையாளர் கள்ளக்குறிச்சி திரு.ராஜ் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. தனஞ்செயன், மாநில
செயற்குழு உறுப்பினர்ராஜேஷ் குமார், மாநில மகளிர் அணி, சமூக ஊடக பொறுப்பாளர் திருமதி
கவிதராஜன்ஆகியோர் நியமிக்கபட்டுள்ளனர். பணி சிறக்க வாழ்த்துக்களையும் மாநில தலைவர் அண்ணாமலை
தெரிவித்துள்ளார்.