திராவிட மாடல் அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தகுதியுடைய மகளிக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன் அளித்த தேர்தல் வாக்குறுதியில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளீருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் இந்த வாக்குறுதியை கண்டுகொள்ளாத நிலையில், எதிர்கட்சிகளின் அழுத்தத்தினாலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் எழுப்பிய கேள்விகளாலும் நடப்பு பட்ஜெட்டில் உரிமை தொகை வழங்கப்படும் என திராவிட மாடல் வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் பட்ஜெட்டில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை திராவிட மாடல் அரசு அறிவித்தது. அதிலும் டெக்னிக்காக பொதுமக்களை ஏமாற்றும் வகையில், தகுதியுடைய மகளிருக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திராவிட மாடலின் இந்த முன்னுக்கு பின் முரணான பேச்சு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனங்களையும் பதிவு செய்து வந்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் திராவிட மாடல் கிழித்து தொங்கவிடப்பட்டது. இந்த நிலையில் திராவிட மாடலின் இந்த அறிவிப்பை டிரோல் செய்து Voice of savukku என்ற டிவிட்டர் பக்கத்தில் பிரதீப் என்பவர் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலாகி திராவிட மாடலின் செயல்பாடுகளை மக்கள் கேலிக் கூத்தாக்கி ரசித்தனர். இந்த விமர்சனத்தை பொறுத்து கொள்ள முடியாத திராவிட மாடலின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இரவோடு இரவாக தனது ஏவல்துறையை அனுப்பி பிரதீப்பை கைது செய்துள்ளது. மேலும் அவரை 15 நாட்கள் சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில் திராவிட மாடலின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பலரும் பிரதீப்பின் அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். முடிந்தால் எங்களையும் கைது செய்யுங்கள் என #Arrestmetoostalin என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
குடிநீர் தொட்டியில் மலம் கலந்தாலோ, பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாலோ கைதில்லை, நகைச்சுவை பதிவு போட்டால் கைதா என கேள்வி கேட்டு திராவிட மாடலை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் இதற்கு முன்னால் திமுக நிர்வாகிகள் எப்படியெல்லாம் பெண்களை அறுவறுக்க தக்க வகையில் பேசினார்கள் என்பதை சுட்டிக்காட்டி, இவர்களை எப்போது கைது செய்யப்போகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்
இந்நிலையில் பிரதீப் கைதுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒரு குடும்பத்தின் கையில் அதிகாரம் குவிந்தால் அது ஏதேச்சதிகாரமாக இருக்கும் என்றும் எப்போது வேண்டுமானாலும் சர்வாதிகாரமாக மாறும் என்றும் தெரிவித்தார். மேலும் இப்படி வீடியோ போடுபவர்களை எல்லாம் கைது செய்ய வேண்டுமானால், மொத்த திமுக ஐடி விங்கும் சிறைக்கு உள்ளே தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பேச்சு சுதந்திரத்தை நசுக்குவது, நள்ளிரவு கைது, சாதனை எதுவும் செய்யாமல் சுயவிளம்பரம் செய்வது இவை தான் உண்மையான பாசிஸ்டுகளின் அடையாளம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.