விருதுநகரில் ரூ.2,000 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் இந்த திட்டத்தினால், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தை தமிழ்நாட்டுக்கு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத்தூரில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வரை பாதயாத்திரை செல்ல உள்ளதாக பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு #திராவிடமாடல் அரசு அனுமதி மறுத்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஸ்ரீனிவாசன் ‘ஆலயம் சென்று வழிபடுவதற்கு அனுமதி மறுத்த ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் மட்டுமே. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கூட நடக்காத அட்டூழியம் இது, அம்மனை சென்று வழிபட அனுமதி மறுக்கிறேன் என காவல்துறை கடிதம் மூலம் தெரிவித்த ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம். என் மாரியம்மனை நான் சென்று வழிபட தடை விதிக்கிற அரசின் ஆணையை நாங்கள் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதனால் எனது தலைமையில் திட்டமிட்டபடி அம்மனுக்கான நேர்த்திக் கடன் நிறைவேற்றும் விதமாக, புனிதமான மாலைகள் அணிந்தும், விரதம் இருந்தும்., அக்னி சட்டி எடுத்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்துடன் அவருக்கு நன்றி கூறி பாதயாத்திரை நடத்துவார்கள். என அறிவித்தார். மேலும் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு அதை வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல இந்த இயக்கம், எங்கள் அன்னை கருமாரியை வழிபட காவல்துறையின் அனுமதி தேவை இல்லை.
தெய்வத்தை வழிபட திராவிட மாடல் அரசு அனுமதி வழங்க வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜகவின் போராட்ட அறிவிப்புக்கு பயந்து திட்டமிட்ட படி யாத்திரையை நடத்தி கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியது. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு மேல் சாத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து காவல்துறை அனுமதியுடன் பாதயாத்திரை நடைபெற உள்ளது.