அரேபிய வசந்தம் இந்த சொல் பலருக்கு புதிதாக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டின் இந்த சில வருடங்களாக இந்த வசந்தம் வீசியது, வசந்தம் என்ற பெயரில் வீசிய புயலால் தமிழ்நாட்டின் அமைதி குலைந்தது.
ஏராளமான மக்களைத் தெருக்களில் கூட்டி , போராட்டம் நடத்தி அரசைக் கவிழ்க்கும் ஒரு நூதனப் போராட்டமே ‘ அரேபிய வசந்தம்’ ( Arab Spring) என்று பெயரிடப்பட்டதாகும். துனிசியா,ஏமன் போன்ற நாடுகளில் அரசுகள் கவிழ்க்கப்பட்டன. சிரியா, பஹ்ரைனில் நசுக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியின்போது நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் இதை அடியொற்றி நடந்திருக்குமோ? தவிர நெடுவாசல்,சேலம் எட்டுவழிச்சாலை தொடர்பான போராட்டங்கள் இதே பாணியோ. அப்போது ஆகாயத்துக்கும் , பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்த பியூஷ் மனுஷ்,திருமுருகன் காந்தி ,பூவுலகின் நண்பர்கள் , உதயகுமார், சுந்தரவள்ளி, நடிகர் சூர்யா, முகிலன் போன்ற (போலி)போராளிகள் இப்போது கப்சிப்! திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இவர்கள் மெளனமாக மாறியதன் காரணம் என்ன ?. இவர்களெல்லாம் திமுகவின் ஏஜென்டுகளோ என்ற சந்தேகம் வருகிறது.
சந்தேகமே வேண்டாம் . அப்போது இவர்கள் நடத்திய திடீர் சாலை மறியலால் சென்னையே ஸ்தம்பித்ததும் ,வாகனங்களில் சென்ற மக்கள் ஆங்காங்கே மேலே செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டு தவித்ததும் ,பள்ளிக் கூடங்களுக்குச் சென்றிருந்த சிறுவர், சிறுமியர் வீடு திரும்ப முடியாமல் தாய்மார்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்ததும் மறக்க முடியுமா? இவர்கள் எவ்வளவு கொடுமைக்காரர்கள்? ,அக்கிரமக்காரர்கள் !
இதைதெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டேயிருங்கள்.