அறம் தவறிய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிவுடன் எதிர்க்கக் கற்றுத் தந்த தியாக வரலாறு; பெருங்காமநல்லூர் சம்பவத்தை உருக்கத்துடன் நினைவு கூர்ந்த தலைவர் அண்ணாமலை

குற்றப்பரம்பரை சட்டம்

குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து போராடிய 16பேரை ஆங்கிலேய கொடுங்கோல் அரசு சுட்டுக் கொன்றதன் 103வது ஆண்டு. குற்றப்பரம்பரைச் சட்டம் என்பது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம். முதன்முதலில் இந்தச் சட்டம் வங்காளத்தில், 1871-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்றப்பட்ட நாளிலிருந்தே பல சட்டத் திருத்தங்களுக்கு உள்ளாகி, கடைசியாக குற்றப்பரம்பரைச் சட்டம் என்று இந்தியா முழுவதும் ஒரே சட்டமாக அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் எந்தவொரு சாதியையும் ‘குற்றப்பரம்பரை’ என அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. ‘குற்றவாளி – நிரபராதி’ என்ற பாகுபாடு கிடையாது. ஒரு சாதியில் பிறந்த அனைவரும் ‘பிறவிக் குற்றவாளிகள்’ என்றது அந்தச் சட்டம்.

குற்றம்பரம்பரை சட்டம் சொல்வது என்ன ?

தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், வலையர் என 89 சாதிகள் குற்றப்பரம்பரைச் சட்டப் பட்டியலில் இருந்தனர். சில சாதியினர் குற்றப்பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். பட்டியலில் இருந்த சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும். இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்களுக்கும்கூட விதிவிலக்கு கிடையாது.
பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் அனுமதி பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால், 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், ஊர்த் தலையாரிகூட அவரைக் கைதுசெய்யலாம். அதேபோல, சந்தேகப்படும்படி ஒருவர் நடந்து கொண்டால்கூட அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை உண்டு. காலையில் சூரியன் உதித்ததிலிருந்து மாலையில் சூரியன் மறையும்வரை அவர்கள் தம் வீட்டிலிருந்து வேறு எங்காவது போகவேண்டுமானால், கிராமத் தலைவரின் அனுமதி பெற வேண்டும்

1920-ம் ஆண்டு, உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில், இச்சட்டத்தை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. தமிழ்நாட்டின் ஜாலியன்வாலபாக் என வர்ணிக்கப்படும் இந்த துப்பாக்கிச் சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உள்பட 16பேர் பலியாகினர். இந்நிலையில் இந்த துயர சம்பவத்தின் 106வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்நாளை நினைவுகூர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அறம் தவறிய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிவுடன் எதிர்க்கக் கற்றுத் தந்த நம் மக்களின் தியாக வரலாறு என்றும் போற்றுதலுக்குரியது என குறிப்பிட்டுள்ளார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top