ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும்; பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி சூளுரை

பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அந்த உரையில் அவர் பேசியதாவது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களுக்கு வணக்கம். நாம் இன்று கட்சியின் நிறுவன தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். பாரத அன்னையின் சேவையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் எனது வாழ்த்துக்கள். மிகச் சிறிய பொறுப்பிலிருந்து மிக உயர்ந்த பொறுப்பை வகிக்கும் கட்சியின் அனைத்து கார்யகர்த்தர்களையும் நான் தலை தாழ்ந்து வணங்குகிறேன்.

2014 க்கு முன்பு நாட்டின் நிலை எப்படி இருந்தது? என்பதை நாம் அறிவோம். அளவற்ற திறன் கொண்ட மக்கள் அவநம்பிக்கையில் வீழ்ந்து கிடந்தனர். அந்த அனுமனைப்போல் நம்மிடம் மறைந்து கிடந்த ஆற்றலை நாம் வெளிப்படுத்தினோம். சமுத்திரம் போன்ற பிரச்சனைகளை வெற்றி கொள்வதில் இன்று அதிக ஆற்றலை பெற்றுள்ளோம்.

அனுமனின் இத்தகைய குணங்களிலிருந்து நமது கட்சியும் கார்யகர்த்தர்களும் உத்வேகம் பெறுகின்றனர். அனுமன் எதையும் சாதிக்கும் ஆற்றல் கொண்டவர். ஆனால் தனக்கென எதையும் அவர் செய்து கொள்ள மாட்டார். ‘இதெல்லாம் எனது அல்ல. அனைத்தும் ராமனுக்காக என்பதே அவரது தாரக மந்திரம். இதுவேதான் பாஜகவின் சித்தாந்தமும்; இதெல்லாம் நாட்டுக்காக இதெல்லாம் எனக்கு இல்லை என்பதே பாஜகவின் சித்தாந்தம்

எல்லாவற்றைக் காட்டிலும் மிக முக்கியமானது நாடுதான். அதனால்தான் ‘ஒரே நாடு உன்னத நாடு’ என்ற கொள்கை இந்திய சித்தாந்தத்தின் அடிநாதமாக உள்ளது. சமுக நீதி என்பது நமக்கு வெறும் அரசியல் முழக்கம் அல்ல. அது நமது லட்சியம்.
சில கட்சிகள் தங்களது குடும்பங்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுகின்றன. ஆனால் பாஜக சமூக நீதியை அச்சு பிசகாமல் பின்பற்றுகிறது.

50 கோடி ஏழைகளுக்கு வித்தியாசம் பாராட்டாமல் ரூ. 5 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு, 35 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள், 11 கோடி ஏழைகளுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 1947ல் ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேறினார். ஆனாலும் சிலர் இன்னும் அடிமை மனப்பான்மையை விடவில்லை. தாங்கள் தான் ஏதோ ஆளப்பிறந்தவர்கள் என்பது போன்ற மனோ நிலையை கொண்டுள்ளனர். தாங்கள் தான் மன்னர்கள் போலவும், மக்கள் அடிமைகள் போலவும் நினைக்கின்றனர்.

2014 க்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டு இவர்களுக்கு மேலும் ஆத்திரம் வருகிறது. தேசத்தின் வடகிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதி நினைத்துப் பார்க்க முடியாதது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 தூக்கி எறியப்படும் என்பதை இவர்கள் கனவில் கூடக் கண்டிருக்க மாட்டர்கள். ஆகவே இவர்கள் பொய்களுக்கு மேல் பொய்களை அள்ளி விடுகின்றனர்.

  1. ஜிஎஸ்டி மூலம் ரூ.18 லட்சம் கோடி வசூல், வருமான வரி ரூ.16 லட்சம் கோடி,
  2. மார்ச் மாதம் மட்டும் யுபிஐ பணப் பரிவர்த்தனை ரூ.14 லட்சம் கோடி,
  3. ஏற்றுமதி இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டது ,
  4. நிலக்கரி உற்பத்தி இதுவரை காணாத உச்சத்தை எட்டியது,
  5. உருக்கு உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு சிகரத்தை எட்டியது,
  6. முதன் முதலாக ரூ.16,000 கோடி ரூபாய்க்கான ராணுவத் தளவாட ஏற்றுமதி,
  7. மொபைல் போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் புதிய சாதனை இன்னும் எவ்வளவோ சாதனைகள்

ஒரே ஆண்டில் 6,500 கி.மீக்கு ரயில்வே தடங்கள் மின்மயமாக்கப்பட்டன,.துறைமுகங்கள் இதுவரை இல்லாத அளவில் சரக்குகளைக் கையாண்டுள்ளன. தேசம் இவ்வளவு விரைவாக முன்னேறிக் கொண்டுள்ளது.

2047ல் நாடு விடுதலை அடைந்து நூறு ஆண்டுகள் பூர்த்தி ஆக உள்ளது. அப்போது இந்தியா உன்னத நிலை அடைந்த நாடாக மாறும் கனவை நனவாக்க கோடான கோடி மக்களை நாம் நம்முடன் இணைத்துக் கொள்ள வேண்டும். கட்சியின் பல்வேறு பிரிவுகளையும் வளர்க்க வேண்டும். நாம் முதலில் விவசாயிகளின் பிரச்னைகளை முன்னெடுத்தோம் . விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தை தொடங்கினோம். குறைந்த பட்ச ஆதார விலையை அதிகரித்தோம். குடிசைப் பகுதி மக்களுக்கு தரமான புதிய வீடுகளை அளித்தோம், சமையல் எரிவாயு இணைப்பு அளித்தோம். அனைவருடனும் இணைந்து, முன்னேற்றத்துக்கான முழக்கத்தை முன் வைத்துப் பணி செய்கிறோம்.

சமுக நீதி என்பது நமக்கு வெறும் வெற்று அரசியல் கோஷம் அல்ல. அது நமது லட்சியமாகும். சில கட்சிகள் தங்களது குடும்பங்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுகின்றன.ஆனால் பாஜக சமூக நீதியை அச்சு பிசகாமல் பின்பற்றுகிறது.

காங்கிரஸ் மற்றும் அதுபோன்ற கட்சிகளின் நிலை என்ன ? குடும்ப அரசியல், ஜாதி, இன அரசியல் . ஆனால் பாஜக நாட்டின் அனைத்து மக்களையும் அரவணைத்து எடுத்துச் செல்லுகிறது. காங்கிரஸ் போன்ற கட்சிகள் அற்பமான விஷயங்களில் கவனம் செலுத்தும் நிலையில் பாஜக மிகப்பெரிய சாகசங்களை செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மொழிபெயர்ப்பு:ஸ்ரீதரன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top