dmkfiles என்ற பெயரில் திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்களை தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். திமுகவை சேர்ந்த 12 பேரிடம் மட்டும் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்த அவர், அவர்களின் பெயர்களில் இயங்கும் நிறுவனங்கள், அவற்றின் தற்போதைய மதிப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்
சொத்து பட்டியலை வெளியிடுவதற்கு முன் உரை நிகழ்த்திய அவர், வனவாசம் என்ற தனது புத்தகத்தில் கண்ணதாசன் எழுதியுள்ள சம்பவத்தை மேற்கோள் காட்டினார். அந்த சம்பவம்; ஒருமுறை கருணாநிதியும், கண்ணதாசனும் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது ஒரு பழ வியாபாரி தனது பழக்கூடையை அவர்களது அருகே வைத்து விட்டு கழிப்பறை சென்றுள்ளார். இதனை கண்ட கருணாநிதி, கண்ணதாசனிடம் திருடலமா எனக் கேட்டுள்ளார். இதனை குறிப்பிட்டு பேசிய தலைவர் அண்ணாமலை, அப்போது ஆரம்பித்தது 1967ல் ஆட்சிக்கு வந்து தற்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளதாக தெரிவித்தார். கருணாநிதியின் மீதான அண்ணாமலையின் இந்த விமர்சனம் பேசுபொருளாகியுள்ளது.