கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தலைவர் அண்ணாமலை வெளியிட்ட DMK files, அக்கட்சியின் 12 நிர்வாகிகளின் சொத்து மதிப்பை பொதுவெளியில் அம்பலப்படுத்தியது. ஆனால் DMK files- இல் கூறப்பட்டிருக்கும் சொத்து மதிப்பு குறித்து, அக்கட்சியின் நிர்வாகிகளோ, அல்லது சம்பந்தப்பட்டவர்களோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை
குறிப்பாக அன்பில் மகேஷ் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, 2019 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருந்தார் என்பதுதான். வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரமாண பத்திரத்தில் அந்த நிறுவனத்தை கொண்டு வர வேண்டாம் என்பதற்காக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது தான் குற்றச்சாட்டு.
அவர் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்ததற்கான ஆதாரமும் வெளியிடப்பட்டுள்ளது. அன்பில் மகேஷிடம் கேட்கப்பட்ட கேள்வி நீ நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்தாயா ? இல்லையா ? என்பதுதான்
ஆனால் அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் மற்ற அனைத்தையும் பேசுகிறார்.
இதே போல #செங்கல் சைக்கோ உதயநிதி ஸ்டாலின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு 2008ல் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தீர்கள். அதிலிருந்து நீங்கள் தயாரித்த குருவி, ஆதவன், மன்மதன் அம்பு, 7 ஆம் அறிவு அத்தனை படங்களும் சரியாக ஓடவில்லை. எப்படி 2011ல் ரூ.300 கோடி சொத்து சேர்த்தீங்க; அதோட மதிப்பு இப்போ எப்படி ரூ.2,010 கோடியாக அதிகரித்தது
இதுதான் கேள்வி. இந்த கேள்விய கேட்டாலே தெறித்து ஓடும் #செங்கல் சைக்கோ உதயநிதி, நான் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடருவேன் என மட்டும் கூறி வருகிறார்.
இவர்கள் நிலைமையே இவ்வாறு இருக்க துண்டுசீட்டை பார்த்தே தவறாக படிக்கும் ஷேக் அலாவுதீனுக்கும் ஜெயகடாவுக்கும் வித்தியாசம் தெரியாத நபர்தான் இன்னும் பீதியில் உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்பந்தம் வழங்கிய ஜெயகடா, ரூ.100 கோடியை லஞ்சமாக வழங்கினார் என குற்றம்சுமத்தப்படுகிறது. மேலும் ஆதாரத்துடன் சிபிஐயிடம் புகாரளிக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒருவேளை சிபிஐ வந்து கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்லுவது, எந்த ஆதாரத்தை காட்டுவது என்பது தான் ஜெயக்கடாவுக்கு முன் உள்ள சிக்கல். அவர் பேசினால் மற்றவர்களையும் போட்டு கொடுத்து விடுவாரோ என்ற அச்சம், திமுகவின் முதல் குடும்பத்தையும் சூழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.