பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட #dmkfiles ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
6.53 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது, வருவாய் குறைவாக உள்ளது என அனைத்து மக்கள் நல திட்டங்களையும் நிறுத்திய #திராவிடமாடலின், இரண்டு இளவரசர்களின் ஓராண்டு வருமான மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி என தியாகராஜன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தலைவர் அண்ணாமலை வெளியிட்ட #dmkfiles தொகுப்பில் ஸ்டாலின் குடும்பத்தின் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள், அவர்களின் நிறுவனங்கள், சபரீசனுக்கும் லண்டனில் உள்ள மணி லாண்ட்டிரிங் நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆதாரங்களுடன் விளக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக லண்டனில் 790, ஆக்ஸ் பிரிட்ஜ் ரோடு, ஹயெஸ் மிடில்செக்ஸ் என்ற முகவரியில் இயங்கி வரும் ஸ்பேஸ் டெல் யுகே லிமிடெட், வாய்ஸ் டெக் சிஸ்டம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் , 2021 முதல் சபரீசன் இயக்குநராக உள்ளதும், இந்த நிறுவனங்களின் முக்கிய பணியே கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது தான் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.
லண்டனில் மட்டும் சபரீசனுக்கு 12 நிறுவனங்கள் இயங்கி வருவது கூடுதல் அதிர்ச்சி தகவலாகும். தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயில் புகாரளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். சிபிஐ விசாரணையில்
சபரீசன் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றி மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்வது உறுதிபடுத்தப்பட்டால் கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.