தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை அதிகரிக்க அண்மைகாலமாக திராவிடமாடல் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்கட்சியாக இருந்த போது பூரண மதுவிலக்கு பற்றி பேசிவிட்டு, தற்போது, மதுவை வைத்து வருமானம் ஈட்டுவதையே பிரதான தொழிலாக செய்து வரும் திமுக அரசின் இந்த செயல் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக வணிக வளாகங்களில் இயந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்வதும், திருமண நிகழ்ச்சிகள், விளையாட்டு மைதானங்களில் மது விற்பனை செய்ய அனுமதி வழங்கியதும் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் வழக்கம் போல வட இந்தியர் எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்ற போர்வைக்குள் மறைய #திராவிடமாடல் காரர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மதுப்புழக்கம் குறைவு தான் என பிரசாரம் செய்கிறார்கள். அதற்கான சில புள்ளி விவரங்களையும் அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள். ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களிலும் இதுபோன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. அப்படியென்றால் உண்மை அதுதானா ? இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மதுவிற்பனை குறைவா ? என்ற கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையில் காண்போம் …
தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு -5 மற்றும் கிரைசல் (Crisil) என்கிற தனியார் நிறுவன கணக்கெடுப்பின் படி, அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் 53% பேர் மது அருந்தும் மாநிலமாக நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் வடகிழக்கு மாநிலங்கள் சட்டீஸ்கர், திரிபுரா, மத்திய பிரதேசம் மாநிலங்கள் இந்த பட்டியலில் முன்னணியில் உள்ளன. ஆனால் பட்டியலில் அவர்கள் இடம்பெற்றதற்கு அவர்களின் பாரம்பரிய வழக்கமே காரணம் என்ற உண்மை மறைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக சட்டீஸ்கரில் பழங்குடியின மக்கள் அதிகமாக மகுவா என்கிற ஒருவகை பூவிலிருந்து கிடைக்கும் மதுவகைகளை அருந்துகின்றனர். வீட்டிற்கு செல்லும் விருந்தினருக்கும் அந்த மதுவை கொடுத்தே உபசரிக்கின்றனர். இது அவர்களின் வாழ்வியலில் ஒரு பகுதியாக உள்ளது. அப்படியிருக்கையில் சட்டீஸ்கர், அருணாசலப் பிரதேசம், திரிபுரா, மத்திய பிரதேசம் போன்ற பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு பேசுவது அடிப்படையிலேயே தவறானது