சரக்கு சப்ளை வருமான துறை ரெய்டு : சர்ச்சையில் சிக்கிய சாராய அமைச்சர்

சரக்கு சப்ளை செய்வது முதல் பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் வரை அடுத்தடுத்து வருமான வரித்துறையில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெட்வொர்க் மொத்தமாக சிக்கியுள்ளது,

கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் ஒரே நேரத்தில் சாராய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.  

பல மாதங்களாக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடக்கிறது என தொடர் புகார் எழுந்ததால் ரெய்டு நடைபெறுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

முதலில் 10 இடங்களில் மட்டுமே ரெய்டு நடத்த திட்டமிடபட்டிருந்த சுழலில், கடைசி நேரத்தில் டாஸ்மாக் பார்களில் முறைகேடாக வசூலிக்கும் பணம் எங்கெங்கு, யார் மூலம் பதுக்கி வைக்கப்படுகிறது என்று சில முக்கிய பிரமுகர்கள் கொடுத்த தகவலின் படி 40க்கும் அதிகமான இடங்களில் ரெய்டு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ரெய்டில் சிக்கிய எலிகள்

தமிழகத்தில் உள்ள 43 டாஸ்மார்க் குடோன்களுக்கு மதுபான உற்பத்தி நிறுவனங்களில் இருந்து சரக்கு சப்ளை செய்யப்படுகிறது. இதில் கடந்த மார்ச் மாதம் 23 குடோன்களில் இருந்து சரக்கு கொண்டு செல்ல ஒரே நபர் தான் வெவ்வேறு நிறுவனங்களின் பெயர்களில் டெண்டர் எடுத்துள்ளதும், இதற்காக 150க்கும் அதிகமான வாகனங்களை இந்தியா முழுவதிலும் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் அவர் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதமே டாஸ்மார்க்கு சரக்குகளை சப்ளை செய்ததாக பில்லும் போட்டு அரசை ஏமாற்றி இருக்கிறார். இவர்தான் அதிகாரிகளுக்கு தங்க முட்டையிடும் வாத்து போன்று சிக்கியவர்,  ஈரோட்டை சேர்ந்த சச்சிதானந்தம். இவரிடம் இருந்து 2.1 கோடி ரூபாய் பறிமுதல் செய்ததாக சொல்லப்படுகிறது.

செந்தில்பாலாஜியின் நிழல் என அறியப்படும் கோவை செந்தில்கார்த்திகேயனின் இடம் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.

ராமகிருஷ்ணபுரத்திலுள்ள அசோக் குமார் (செந்தில்பாலாஜியின் சகோதரர்) வீட்டுக்கு, வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி தலைமையில் 5பேர் கொண்ட குழு சோதனைக்கு சென்ற போது, திமுகவினர் தடுத்து நிறுத்தி அதிகாரி காயத்ரியின் கையிலிருந்த செல்போன், கைப்பை, ஆவணக்கோப்புகள் இருந்த பை உள்ளிட்டவற்றை அங்கிருந்த திமுகவினர் சிலர் பறித்ததும், அதிகாரியின் கார் கண்ணாடி  உடைக்கப்பட்டதும், நாம் அறிந்ததே.

இந்த சோதனையில் அடுத்து சிக்கியவர் கரூர் – கோவை சாலையில் கொங்கு மெஸ்  என்ற ஓட்டல் நடத்திவரும் சுப்ரமணியன். இங்கு நடந்த சோதனைக்கு பின் மெஸ்ஸை இழுத்து மூடி சீல் வைத்து விட்டு சென்றனர்.

க.பரமத்தி அருகில் உள்ள பாலவிநாயகர் புளூமெட்டல் கல்குவாரி, தங்கராஜ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதை போல செந்தில் பாலாஜியின் குடும்ப நண்பர்களும், சகோதரர்களுமான சங்கர் ஆனந்த், சசி ஆனந்த் ஆகியோரின் இடங்களிலும் ரெய்டு நடந்தது.

சசி ஆனந்தும், செந்தில் பாலாஜியும் ஒன்றாக படித்தனர். அதே போல் சங்கர் ஆனந்த், அசோக் குமாருடனும் ஒன்றாக படித்தார். 2011 போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு சங்கர் ஆனந்த் அசோக் குமார் மூலம் நெருக்கமானார்.

இதை போல ரெய்டில் காந்திகிராமத்தில் வசிக்கும் பிரேம்குமார் என்பவரின் மனைவி ஷோபனா சங்கர் ஆனந்தின் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றியதும், இவரும் சில ஆவணங்களை மறைத்து வைத்துள்ளதும் தகவல் வந்ததையடுத்து, சோதனை செய்தனர்.

அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரில், கரூர் பைபாஸ் சாலையில் உள்ள பிரமாண்ட வீடு கட்டப்பட்டு வரும் சூழலில் இந்த வீடு சம்மந்தமாக சில முறைக்கேடு நடந்துள்ளதை கண்டுபிடித்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

கட்சிக்கும் கட்டிங் தான்..!

கடந்த கால அதிமுக, திமுக ஆட்சிகளில் டாஸ்மாக் பார் வருவாய் பிளாக்கில் விற்கப்படும் சரக்கு, கூடுதல் விலைக்கு விற்கப்படும் சரக்கு வருமானம் என டாஸ்மாக்கில் கொட்டும் பணத்தை அந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர், மாவட்ட எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகள், கிளைச் செயலாளர், என அனைவரும் பிரித்துக் கொள்வது வழக்கம். . ஆனால் திமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி அமைச்சராக வந்ததிலிருந்து டாஸ்மாக் துறையின்  வருமானம் அனைத்தும் செண்ட்ரலைஸ்டு செய்யப்பட்டது.

இதனால் தமிழகம் முழுவதும் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து இன்றுவரை டாஸ்மாக் பக்கம் கட்சி நிர்வாகிகள் நெருங்க முடியவில்லை.  சீனியர் அமைச்சர்கள் கூட ஒரு பார் ஏலம் எடுக்க முடியவில்லை.  ஒட்டுமொத்தமாக வருவாயையும் செந்தில்பாலாஜி மட்டுமே சுருட்டிக்கொள்கிறார் என கட்சி நிர்வாகிகள் பொங்குகிறார்கள்.  ஒருவழியாக இந்தப் பஞ்சாயத்துக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் முற்றுப்புள்ளி வைத்தார் செந்தில் பாலாஜி.

கடந்த ஆறு மாதங்களாக அனைத்து மாவட்டச் செயளாளர்களில் தொடங்கி கிளைச் செயலாளர்கள் வரையிலான மாதந்திர கட்சி செலவுகளை கவனித்துக் கொண்டார்.  இது போன்ற நடவடிக்கைகள் மூலம் இன்றைய தேதியில் திமுக கட்சியில் அதிக மாவட்ட செயலாளர்களையும், கொங்கு மண்டலத்தில் அதிக எம்எல்ஏ,க்களையும் தன் கையில் வைத்திருக்கும் ஒரே அமைச்சர் செந்தில்பாலாஜி தான், தற்போது வரை 30 அமைச்சர்கள் சாராய அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.

மேலும், இதே நிலை நீடித்தால் வருங்காலங்களில் ’திமுகவின் தவிர்க்கமுடியாத மாபெரும் சக்தியாக சாராய அமைச்சர் செந்தில்பாலாஜி மாறி, எதிர்காலத்தில் அறிவாலாயத்தையே தன் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்’ என சீனியர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top