ஆதாரம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய புதுக்கோட்டை நிர்வாகம்: கேள்வி கேட்கும் பாஜக
புதுக்கோட்டைகக்கு புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் தனது சக்கிப்புத்தன்மையில்லாமல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பிருந்த வழிபாட்டிற்குறிய விநாயகரை அகற்ற முயன்று, முடியாமல் பின்னர் இடம் மாற்றி வைத்து கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலகம் முன் வழிபாட்டில் இருந்த விநாயகர் கடந்த 03.06.2023 அன்று இடம் மாற்றப்பட்டது. புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலக நுழைவாயிலின் ஒரு பகுதியில், பல ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சிலை உள்ளது. அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை கலெக்டராக மெர்ஸி ரம்யா, கடந்த 22.05.2023 அன்று பொறுப்பேற்றார். அதன் பின், அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியது.
இதையறிந்த பாஜக மற்றும் ஹிந்து இயக்கங்கள், விநாயகர் சிலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். முகாம் அலுவலகம் முன் திரண்டு கோஷமிட்டனர். இவர்களை உள்ளே விட போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது ‘சிலை அகற்றப்படவில்லை’ என, கலெக்டர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான போட்டோ ஆதாரமும் வெளியிடப்பட்டது. முதலில் இருந்த போட்டோவில் அலுவலகத்தில் உட்பகுதியில் இருந்த விநாயகர், வெயில் படும் படி மரங்கள் முட்புதர்கள் சுழ்ந்து தோட்டத்தில் பலிபீடம் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பிரச்னை மேலும் பெரிதானது.
இது சம்மந்தமாக, பாஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் வெளியிட்ட அறிக்கையில்:
புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் இருந்த விநாயகர் விக்ரஹம் இடமாற்றம் செய்யப்பட்டு, விநாயகர் வீற்றிருந்த மரத்திலான மண்டபம், தற்போது திறந்தவெளி தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
வழிபாடு நடத்தும் தெய்வ சிலைகளை, அவ்வப்போது மாற்றி அமைப்பது, வழிபாட்டு முறைக்கு உகந்ததல்ல. விநாயகர் சிலையை இடம் மாற்ற வேண்டிய முறையான காரணத்தை தெரியப்படுத்த வேண்டும்.
முறையான காரணங்கள் இல்லாத சூழலில், முன்னதாக இருந்த இடத்தில் மீண்டும் விநாயகரை ஸ்தாபிக்க வேண்டும். விநாயகர் சிலையை புதிய இடத்தில் மாற்ற வேண்டிய நியாயமான காரணங்கள் இருப்பின், ஆகம விதிகளை பின்பற்றி, பலி பீடத்துடன் முறையாக பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
ஹிந்து மதத்தினரின் மத நம்பிக்கையை புண்படுத்தும் முறையற்ற செயல்களை, அரசு செய்யக் கூடாது. என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர்.டி.ஐ., தகவல் அறிக்கையில் கேட்கப்பட்ட அவருடைய கேள்விகள் பின்வருமாறு:
1, 03-06-2023 தேதியில் மாவட்ட ஆட்சியர் பணியில் இருந்த அதிகாரியின் பெயர் குறித்த தகவல்கள் தரவும்.
2, 03-06-2023 தேதியில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் மேற்கொண்ட பணி குறித்த தகவல்கள் நேரம் வாரியாக தகவல்கள் தரவும்.
3, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் கடந்த 02-06-2023 அன்று பணியில் இருந்த அரசு அலுவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் பணியின் பெயர்கள் குறித்த தகவல்கள் தரவும்.
4, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் கடந்த 03-06-2023 அன்று பணியில் இருந்த அரசு அலுவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் பணியின் பெயர்கள் குறித்த தகவல்கள் தரவும்
5, தற்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் எந்த தேதி முதல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தினை பயன்படுத்தி வருகிறார் என்பது குறித்த தகவல்கள் தரவும்.
6. மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் பல, பல, ஆண்டுகளாக, தொன்று தொட்டு இருந்து வரும் விநாயகர் கோவில் குறித்த விவரம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிய வந்த தேதி குறித்த தகவல்கள் தரவும்.
7. தற்போதைய மாவட்ட ஆட்சியர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்ட தேதி, உத்தரவிட்ட அரசு அலுவலரின் பெயர் குறித்த தகவல்கள் மற்றும் மேற்கண்ட உத்தரவின் சான்றிட்ட நகல் தரவும்.
8, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் வழிபாட்டில் இருந்த விநாயகர் கோவில் அமைந்திருந்த இடத்தில் இருந்து கோவிலை விக்கிரகத்துடன் அப்புறப்படுத்த உத்தரவிட்ட அலுவலரின் பெயர் மற்றும் அவரின் பணியின் பெயர் குறித்த தகவல்கள் தரவும்.
9, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் வழிபாட்டில் இருந்த விநாயகர் கோவில் எந்த மரத்தினால், என்ன அளவுகளில் அமைக்கப்பட்டிருந்தது என்பது குறித்த தகவல்கள் தரவும்.
10. மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் அமைந்திருந்த விநாயகர் கோவில் மற்றும் அதிலுள்ள விநாயகர் விக்கிரகத்தால் முகாம் அலுவலக அதிகாரிக்கு ஏற்பட்ட இடையூறு குறித்த தகவல்கள் தரவும்.
11, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் அமைந்திருந்த விநாயகர் கோவில் மற்றும் விநாயகர் விக்கிரகத்தை அகற்றி அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொண்டுள்ள அலுவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் பணியின் பெயர்கள் குறித்த தகவல்கள் தரவும்.
12, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் கோவில் விக்கிரகத்துடன் அகற்றப்படுவதற்கு முன்னதாக ஆகம விதிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர்கள் மற்றும் ஆகம விதிகள் அறிந்த ஸ்தபதிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தரவும்.
13, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் கோவில் விக்கிரகம் அகற்றப்படுவதற்கு முன்னதாக கடைப்பிடிக்கப்பட்ட வேண்டிய ஆகமவிதிகள் குறித்து ஸ்தபதிகள் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள ஆலோசனை குறிப்புகளின் ஆவண நகல்கள் தரவும்.
14, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடப்பு தேதியில் அமைந்துள்ள விநாயகர் கோவில் மற்றும் அதில் உள்ள விநாயகர் விக்கிரகம் எந்த திசை நோக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் தரவும்.
15, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்த விநாயகர் கோவில் விக்கிரகத்துடன் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட மாற்று இடத்தினை தேர்வு செய்த அலுவலரின் பெயர் மற்றும் பணியின் பெயர் குறித்த தகவல்கள் தரவும்.
16, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்த விநாயகர் கோவில் விக்கிரகத்துடன் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடத்தில் வைக்கப்பட்டுள்ள இடத்தில் புதிதாக அமைக்கப்படுள்ள பீடத்திற்கு செலவிடப்பட்ட நிதி குறித்த தகவல் மற்றும் மேற்கண்ட நிதி அரசின் எந்த திட்டம் கீழ் செலவிடப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் தரவும்.
17, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்த விநாயகர் கோவில் விக்கிரகத்துடன் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கண்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பீடத்திற்கான பணிகளை மேற்கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தரவும்.
18, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்த விநாயகர் கோவில் அமைந்திருந்த இடத்திற்கும், தற்போது விநாயகர் விக்கிரகத்துடன் கோவில் அமைந்துள்ள இடத்திற்கும் இடையே உள்ள துரம் மற்றும் இடைவெளி குறித்த தகவல்கள் தரவும்.
19, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் அமைந்திருந்த விநாயகர் கோவில் விநாயகருக்கு அன்றாடம் பூஜை நைவேத்தியம் செய்யபட்டு இருக்கும் நிலையில் தற்போது மாற்று இடத்தில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் கோவில் விநாயகர் விக்கிரகத்திற்கு பூஜை போன்ற சடங்குகள் மேற்கொள்ள நியமனம் செய்யப்பட்டுள்ள ஆகமவிதிகள் அறிந்த பணியாளர்கள் குறித்த தகவல்கள் தரவும்.
20, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் அமைந்திருந்த விநாயகர் கோவில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பலிபீடம், புதிதாக விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காணப்படாத நிலையில்
அ, முகாம் அலுவலகத்தில் விநாயகர் கோவில் முன்புறமாக அமைந்திருந்த பலிபீடம் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட விநாயகர் கோவில் முன்பு காணப்படாத நிலையில் மேற்கண்ட பலிபீடம் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதுடன், எந்த துறையின், எந்த அரசு அலுவலரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் தரவும்.
21. முகாம் அலுவலகத்தில் முன்பு அமைந்திருந்த இடத்தில் இருந்து விநாயகர் கோவில் அகற்றப்பட்டு புதிய இடத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில்
அ, விநாயகர் கோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் முன்பு பலிபீடம் அமைக்கப்படும் தேதி குறித்தும், மற்றும் மேற்கண்ட பலிபீடம் எந்த, எந்த அளவுகளில் அமைக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் தரவும்.”
என மாவட்ட நிர்வாகத்தை நோக்கி 21 கேள்விகளை அடுக்கியுள்ளார்.
கிறிஸ்தவர் என நம்பப்படும் மாவட்ட ஆட்சியர், விநாயகரை கைவைத்தது பிரச்னை ஆகி உள்ளது, இதுவரை கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் வரவில்லையா, அவர்கள் செய்யாததை இவர் ஏன் செய்தார், மத வெறிதானே என்று கேள்வி எழுப்பிகின்றனர் பாமர மக்கள்.
இந்த ஆட்சியரிடம் இந்துக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர் !