தமிழகத்தில் சாராயத்திற்கு உள்ள மரியாதை கல்விக்கு இல்லை என்பதை பட்டவர்த்தனமாக நிரூபிக்கும் மாவட்டம் சாராய அமைச்சரின் கரூர் மாவட்டம்.
இம்மாவட்டத்தில் 12 கலை கல்லூரிகள் இருக்கின்றன அதில் 3 அரசு கல்லூரிகள் உள்ளன. இங்குள்ள அரசு கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். ஆனால் இங்கு எந்த அடிப்படை வசதியும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அரவக்குறிச்சி மாரியம்மன் கோயில் பின்புறம் செயல்படுகிறது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இங்கு செல்ல சிறு தெரு ஒன்று உள்ளது. பாழடைந்த கட்டிடத்தில் அரசு கலைக்கல்லூரி என்று போர்டு தொங்கி கொண்டிருக்கிறது. கல்லூரி என அருகில் சென்று பார்த்தால் தான் அது சமூக நலக்கூடம் என தெரிய வருகிறது. கல்லூரிக்கு உள்ளே சென்று எந்தப்பக்கம் திரும்பினாலும் டேபிள் சேர், பீரோ, என குப்பையும் துசியுமாய் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
ஒரு அறையின் மேலே, கம்யூட்டர்சயின்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது. உள்ளே பார்த்தால் ஸ்டோர்ரூம் போன்று சீராற்ற முறையில் பொருட்கள் சிதறிக்கிடந்தன.
கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்க வந்திருந்த மாணவி ஒருவர் ‘’ஒவ்வொரு காலேஜ்-க்கும் என்று ஒரு தனித்துவம் இருக்கும், ஆனால்,இந்த காலேஜ் மட்டும் தான் குடோன் போன்று இருக்கிறது. இந்த காலேஜைப் பார்த்ததுமே என் கனவெல்லாம் நொறுங்கிடுச்சு. எப்படிப் படிச்சு முடிச்சு வெளியே வரப்போறெனோ.. எப்படி வேலை தேடுறது என்று தெரியலை” என விரக்தியாக தெரிவித்தார்.
வேளாண் கல்லூரி
அடுத்து, கரூர் பஜாரில் உழவர் சந்தைக்கு பின்புறம் செயல்படுகிறது வேளாண் கல்லூரி. இதுவும் கரூர் மாநகராட்சியின் சமூக நலக்கூடம் தான். “ரெண்டு வருஷமா இங்கதான் காலேஜ் செயல்படுகிறது,
அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கல்லூரி செயல்படுகிறது. கல்லூரி கட்ட 10 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கிய சுழலில், இடம் தேர்வு செய்யப்படாததால், இன்னும் கட்டுமானம் ஆரம்பிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கரூர் சமூக ஆர்வலர் ஒருவர் “கரூரை பெரிய தொழில் நகரம் என பலரும் சொல்லிக்கொள்ளும் சுழலில், சொல்வதற்கு ஏற்றாற் போல் ரெய்டுல கோடி, கோடிய ரூவா அள்ளுறாங்க. அதுல ஒரு கோடியை காலேஜ்க்கு ஒதுக்குனா குறைஞ்சிடவா போறங்க” என சரமாரியாக கேள்வி கேட்டார்.
130 மாணவர்கள் மட்டுமே படிக்கும் அரவக்குறிச்சிகலைக் கல்லூரிக்கு, கல்லூரியின் நிலைதெரியாது. 1100 மாணவர்கள் இந்த ஆண்டு அப்ளிகேஷன் அனுப்பி இருப்பது வியப்பு!
கல்லூரியை மேம்படுத்தவா அவர் அமைச்சரானார், சாராயத்தை விற்கத்தானே என்கின்றனர் கரூர் மாவட்ட மக்கள்.