பிபிசி ரூ.40 கோடி வரி ஏய்ப்பு : வாய்திறக்காத எதிர்க் கட்சிகள்

தாங்கள் வருமான வரித் துறை கணக்கு தாக்கல் செய்த போது, ரூபாய் 40 கோடியை வருமான வரித்துறை கணக்கில் இருந்து குறைத்து காட்டியுள்ளோம் என பிபிசி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

இங்கிலாந்தின் பிரபல பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் என்னும் பிபிசி ஒலிபரப்பு நிறுவனம்  சமீபத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக 2 பகுதிகளாக ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டது.

எவ்வித ஆதாரமும் இல்லாமல் குஜராத் கலவரம் பற்றி அன்றைய மோடி அரசை குற்றம் சுமத்தியவர்களை மீண்டும் மீண்டும் பேச வைத்து எடுக்கப்பட்ட உள்நோக்கம் கொண்ட ஆவணப்படம் அது, எனவே அப்படம் சமூக ஊடக தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த நிலையில் பலரும் அதனை ஒளிபரப்பு செய்தனர். இது உலகம் முழுவதும் பிபிசிக்கு எதிராக பெரும் விவாதத்தை கிளப்பியது. அதே வேளையில், கடந்த பிப்ரவரியில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் 60க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்து அரசை ஏமாற்றியதாக கூறப்படும் நிறுவனங்களை குறிவைத்து அந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

சோதனையின் ஒருபகுதியாக டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி ஊடக அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, இங்குள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக எதிர்ப்பு கட்சிகள் இந்த வருமான வரித்துறை சோதனையை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் (06.06.2023) மத்திய நேரடி நிதி வரி வாரியத்துக்கு இ மெயில், ஒன்றை பிபிசி நிறுவனம் அனுப்பியது. அதில், ’நாங்கள் எங்கள் வருவாயில் இருந்து ரூ.40 கோடி குறைத்து காட்டி இருப்பதை ஒப்புக்கொள்கிறோம்’ என தெரிவித்திருந்தது.  இதற்கு வருமான வரித்துறை சார்பில், இதன் மேல் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,  மேலும் இ மெயில் மூலமாக பதிலளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது’.

பிபிசி உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விவகார விஷயங்கள்  தொடர்பான செய்திகளை வெளியிட்டு சர்ச்சையை கிளப்புவதோடு, தன் சொந்த நாடான பிரிட்டனுக்கும் எதிராக சில சமயங்களில், அவதூறு செய்திருகிறது. குறிப்பாக 1987ஆம் ஆண்டில், அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் மார்க்ரெட் தாட்சருக்கு எதிராக பரப்புரை செய்தது, 1995 ஆண்டு பிரிட்டிஷ் இளவரசி டயானாவை மன்னர் குடும்பத்துக்கு எதிராக பேச வைத்தது, குறிப்பிடத்தக்கவை.

பிப்ரவரியில் பிபிசி டெல்லி அலுவலகத்தில் நடந்த சோதனையின் போது, பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ஊடக சுதந்திரத்தின் குரல் வளையை மத்திய பாஜக அரசு நெறிக்கிறது என்றும் விமர்சனம் செய்தவர்கள் யாரும்  தற்போது தான் வரி ஏய்ப்பு செய்ததை பிபிசி ஒப்புக்கொண்டுள்ள சூழலில், பிபிசியை குறைகூறவோ, தங்கள் செயலுக்கு மன்னிப்புக் கேட்கவோ முன்வரவில்லை என்பது கண்டிக்கத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top