பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கங்கை அமரன் ’நாத்திகம் பேசி ஏமாற்றுவது எனக்கு பிடிக்கவில்லை, என்றும் கடைசி வரையில் பாஜக தான் இருப்போம் என்றும்’ சமீபத்தில் பிரபல தமிழ பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர்,
”கலைஞர் எம்.ஜி.ஆர். இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள் தான் எங்க குடும்பமும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தது தான் ஆனால், அந்தக் கட்சியில் நாங்கள் உறுப்பினர்களாக இருந்ததில்லை. அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டதும் இல்லை.
கடவுளை நம்புவன் முட்டாள், காட்டுமிராண்டி, அயோக்கியன் என்று சொன்ன பெரியாரின் சிலைக்கு இரண்டு கட்சிகளும் மாலை மரியாதை செய்கிறார்களே? அப்படி என்றால் இரு கட்சிகளுமே மக்களின் ஆன்மிக நம்பிக்கைகளை ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம்? பிறகு எப்படி கடவுளுக்கு எதிராகப் பேசவில்லை. அவர்கள் என்று சொல்ல முடியும்?
எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. மக்களின் சென்டிமெண்ட்களை இறைநம்பிக்கையை மதிக்கும் கட்சி. பாஜக அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தேன்.
பெரியாரை பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. அவரின் கொள்கைகளையும் அதைப் பின்பற்றுபவர்களையும் பிடிக்கவில்லை என்றுதான் சொல்கிறேன். திமுகவைச் சேர்ந்தவர்கள் இன்றும் ரகசியமாக கோயிலுக்குச் சென்று தங்கள் குடும்பம் செழிக்க வழிபாடு செய்கிறார்கள். நீங்கள் நன்றாக இருக்க என்ன வழியைப் பின்பற்றுகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கும் சொல்வது தானே நியாயம்? ஆனால் அதை மறைத்துவிட்டு நாத்திகம் பேசும் ஏமாற்றுத்தனம் எனக்கு பிடிக்கவில்லை.
உங்கள் மனைவி உங்களுக்குப் பிடிக்காததைச் செய்யும் போது அதைக் கண்டிக்காமல் இருந்தால் உணர்ச்சியற்ற நபராகவே கருத முடியும். ஒருவர் தவறு செய்யும் பட்சத்தில் அது மனைவியாக இருந்தாலும், தவறு என்று சுட்டிக்காட்டுபவர்கள் தான் மனிதன்.
பிறந்ததிலிருந்து நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் இருந்தது இல்லை. பாஜகவில் இணைந்த பிறகு எங்களுக்கான உரிய மரியாதையை அக்கட்சி கொடுத்துவருகிறது. இப்போதுகூட என் அண்ணன் இளையராஜவிடம் பேசிவிட்டுதான் வருகிறேன். பிரதமர் மோடி மிகவும் அன்புடன் பேசியதைப் பற்றி அவரும் சொல்லிக் கொண்டிருந்தார். பாஜக மட்டுமே இந்து மத நம்பிக்கைகளை மதிக்கும் கட்சியாக இருக்கிறது. அதனால் இந்த வாழ்க்கையில் கடைசிவரை பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் கங்கை அமரன் சேரப்போவது இல்லை”. என கட் அண்ட் ரேட்டாக தெரிவித்தார்.